காதலின் அவஸ்த்தை எதிரிக்கும் வேண்டாம்.... ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மற்ற எந்த தோல்வியை விட இந்த தோல்வி நம்மை நிலைகுலையச் செய்திடும். வலிகளுக்கெல்லாம் பெரும் வலியாய் இந்த வலி இருக்கும்.

ஆம், காதல் தோல்வி, வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனையை சமாளித்து மீண்டு வந்தவர்கள் கூட காதல் என்னும் வரும் போது கொஞ்சம் தடுமாறித்தான் போகிறார்கள்.

என்றாவது யோசித்திருக்கிறீர்களா? காதல் பிரிவின் வலி ஏன் இத்தனை கொடூரமாய் இருக்கின்றதென்று...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் உணர்வு :

காதல் உணர்வு :

காதல் என்பது ஓர் உணர்வு... உடல் உணர்வதை விட மனம் அதிகம் லயித்துவிடுவது தான் இதில் சிக்கலாகிறது.காதலை உணரும் முடிகின்ற அதே நேரத்தில் அதனை ஒரு உருவத்தில் ஒளித்து வைத்து பார்க்கலாமே தவிர நேரடியாக பார்க்க முடிவதில்லை. அந்த உருவம் விலகும் போது என் உணர்வும் இனி எனக்கு கிடைக்காது என்ற பயம் ஒரு காரணம்.

கண்ணால் பார்ப்பது :

கண்ணால் பார்ப்பது :

ஓர் காயம் வெளியே தெரியும் போது நமக்கு என்ன காயம் எதனால் ஏற்பட்டது. அது சீக்கிரம் ஆறிவிடும் அதற்கான மருந்துகளை போடுகிறோம் என்ற தகவல் உங்கள் மூளைக்கு சென்று கொண்டேயிருக்கும். வலி நிவாரணிகளை சாப்பிட்டு இருக்கிறோம் என்ற திருப்தியே வலியை மறக்கச் செய்திடும். ஆனால் காதலில் அப்படியல்ல.

மனதுக்குள் இருக்கும் ஓர் உணர்வு திடீரென்று இல்லை.அதுவும் எப்படிப்பட்டது என்பதே தெரியாமல் அதற்கான மருந்து என்னவென்று தெரியாமல் குழம்பும் மனநிலை தான் காதலின் வலியை இன்னும் இன்னும் அதிகமாக்குகிறது.

திடீர் பயம் :

திடீர் பயம் :

காதலின் உணர்வுக்கு பழக்கமாகிவிட்ட பிறகு திடீரென்று ஏற்படும் இந்த பிரிவை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற திடீர் பயம் முதல் காரணம். ஒன்றாக சேர்ந்திருந்த காலத்தில் பழக்கப்பட்ட சில பழக்கங்களை தனியாக இனி செய்ய வேண்டுமா என்ற தயக்கம் உங்களை வலி அதிகமாக்குகிறது.

கோபம் :

கோபம் :

நமக்கு பிடித்தமானவர் அல்லது நம் குழந்தை, செல்லப் பிராணியோ, நாம் சொல்வதை மீறி செல்கிறார் என்றால் கோபம் வரும். இதுவரை காலமும் உங்கள் அன்புக்கு உரியவராக இருந்தவர் இனி அந்த இடத்தில் இல்லை எனும் போது கோபம் வரும். இந்த கோபம் உங்கள் இணை மீது மட்டுமல்ல உங்கள் மீதே திரும்பவும் செய்யும். ரொம்ப செல்லம் கொடுத்தது ஏன் தப்பு என்று நீங்கள் உங்களை திட்டிக் கொள்ளும் அதே நேரத்தில் கோபத்திற்கு யார் காரணம் இதற்கு வடிகால் என்ன என்று தெரியாமல் காதல் பிரிவின் வலி அதிகரிக்கும்.

ஆறுதல் :

ஆறுதல் :

காதலர்கள் எப்போதும் போன் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புகாரை எல்லாம் நாம் கேட்டிருப்போம். நம்மையும் தாண்டி நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஓர் உறவு தேவைப்படுகிறது. அது காதலென்ற போர்வையால் வந்த உறவு எனும் போது அதற்கான ஈர்ப்பு அதிகம் என்பதால் அதிக நேரம் செலவிடுகிறோம்.

திடீரென்று அந்த ஆறுதல் நமக்கு கிடைக்காதா? என்ற தவிப்பு பிரிவின் வலியை அதிகமாக்குகிறது.

தனிமை :

தனிமை :

பிரிவுக்கு பிறகு இனம்புரியாத தனிமையை உணர்வீர்கள். உங்கள் காதலன்/காதலி அருகில் இல்லையென்றாலும் நமக்கானவர் என்ற நிறைவான உணர்வு உங்களை தனிமைகொள்ளாமல் வைத்திருக்கும். பிரிவுக்கு பிறகு அந்த நெருக்கம் இனி இல்லையா என்ற கேள்வியே உங்களை தனிமைச் சுமை ஏற்றிவிடும்.

எல்லாம் பொய் :

எல்லாம் பொய் :

காதலிக்கும் போது உண்மையாய் காதலித்திருப்பீர்கள் எல்லாமே உங்களின் விருப்பப்படி நடந்திருக்கும். பிரிவு என்று வந்தவுடன் இதுவரை வாழந்த வாழ்க்கை பொய்யா என்ற எண்ணம் வரும். அல்லது நாம் ஏமாற்றப்பட்டோமா ஏமாந்துவிட்டேனா என்று கேள்வி துளைத்தெடுக்கும் போது காதல் பிரிவு என்பது வலி மிகுந்ததாக ஆகிடும்.

பொறாமை :

பொறாமை :

பலரும் ஏற்க மறுக்கும் விஷயம் இது. உங்கள் காதல் மீதான பொறாமை. உங்களை விட்டு பிரிந்து விட்டப் பின்னரான வாழ்க்கை குறித்த பொறாமை உங்கள் வலியை அதிகமாக்கும். குழந்தை கையில் பொம்மையை பிடுங்கி வைத்தால் அழுமே... அதைப் போல

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

நாம் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டோம் இனி மீள வழியே இல்லை என்று மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதால் மன அழுத்தம் அதிகமாகி வாழ்க்கையே வெறுப்பாகிடும். ஒரு கட்டத்தில் இதற்கான காரணம் காதல் பிரிவு தான் என்று உணரும் வேலையில் பிரிவின் வலி மீது பழி விடும்.

பழகிடு மனமே :

பழகிடு மனமே :

பழக்கப்படுத்தப்பட்ட ஓர் விஷயத்தை திடீரென்று நிறுத்தச் சொல்வது கடினம், அதைப் போலவே தான் இங்கேயும். என் உண்மையான காதல் தோற்றுவிட்டதா என்ற கேள்வியை எதிர்க்கொள்ள முடியாமல் தவிப்பீர்கள்.

சுற்றமும் நட்பும் :

சுற்றமும் நட்பும் :

பிரிவின் வலிக்கு கணிசமான பங்கு இவர்களுக்கும் உண்டு. ஒன்று அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர், என் காதலைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற ஏக்கம் அதை விட, காதலை நினைவுப்படுத்தும் விதமாக மீண்டும் மீண்டும் எதோ ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

why love hurts more

Reasons behind the love pain
Story first published: Tuesday, August 8, 2017, 10:35 [IST]