For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த புருஷன் பொண்டாட்டி எல்லாம் ஏன் எப்பவும் டிஷ்யூம் போட்டுக்கிறாங்க? இதான் காரணம்!!

கணவன் மனைவி என்றாலே எப்போதும் சண்டையிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இருவருக்குள்ளும் ஒத்து போகாததற்கு என்ன காரணம் என்று தெரியுமா?

|

காதலர்களுக்குள் சண்டை வருவது சகஜம் என்று நினைத்த காலம் போய் இன்றைக்க தம்பதிகள், திருமணமானவர்கள் என்றாலே சண்டை வருவது சகஜம் தான் என்று எடுத்துக் கொள்கிற மனப்பாங்கு இருக்கிறது.

ஒருவர் தன்னுடைய இயல்பிலிருந்து மாறும் போது அல்லது தன்னுடைய விருப்பம் நிறைவேறாத போது ,தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் போது கோவம் பிய்த்துக் கொண்டு வரும் அதனை எதிரில் இருக்கும் குடும்பத்தாரிடம் காட்டுவது தான் இங்கே பலரது வழக்கமாக இருக்கிறது. மற்றவர்களைப் பற்றி பொறுமையாக பேசலாம், இந்த திருமணமான தம்பதிகள் பலரும் சொல்லும் ஒரே டயலாக் இது

எங்களுக்குள்ள செட் ஆகல, எப்ப பாத்தாலும் சண்ட தான். கணவன் மனைவிக்கு இடையில் ஏன் இந்த இடைவேளி,இருவரது கருத்துக்களும் ஒரு புள்ளியில் இணையாததற்கு என்ன காரணம் உணர்ந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதுகாப்பு :

பாதுகாப்பு :

பெண்களுக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்பு உணர்வு தேவை. ஏனென்றால் பெண்களின் வளர்ப்பு முறை அப்படி, அப்பா, சகோதரன் என்று யாராவது ஒரு ஆண் துணையைச் சார்ந்தே வளர்க்கப்பட்டிருப்பார். திருமணத்திற்கு பிறகும் அதே பாதுகாப்பு உணர்வை கணவரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்.

குழந்தைத்தனம் :

குழந்தைத்தனம் :

இது பாதுகாப்பு உணர்வின் இன்னொரு வெர்ஷன். ஒரு குழந்தையை எப்படியெல்லாம் அணுகுவோம் அந்த ஒரு நெருக்கம் எப்போதும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள்.

உலகம் :

உலகம் :

பெண்களின் உலகம் மிகச் சிறியது. தன்னைச் சுற்றி நடப்பவை மட்டுமே உலகமென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். திருமணம் முடிந்து பிறந்து வளர்ந்த வீடு, இடம்,ஊர் இவை எல்லாவற்றையும் விட்டு உங்களுடன் வந்து இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களின் அரண்மனை ராஜ்ஜியம் எல்லாமே அந்த நான்கு சுவற்றுக்குள் அடங்கிப் போய்விடும்.

தான் நினைப்பதை பேச,பகிர அங்கே கணவனாகிய உங்களைத் தவிர வேறு ஆட்கள் இல்லை.

கணவன்மார்கள் :

கணவன்மார்கள் :

ஆண் பிள்ளைகள் வளரும் போதே அதீத சுதந்திரத்துடன் தான் வளர்க்கப்படுகிறார்கள். எனக்கான இடம் இது, எனக்கான உரிமை இது, என்று நீங்கள் கேட்காமலே வாரி வழங்கி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

திருமணமான பிறகு அந்த சுதந்திரத்தில் ஏதேனும் சிக்கல்கள் வரும் போது இதற்கு என்ன காரணம் மனைவி தானே என்று விரிசல் விழுகிறது.

எதிர்ப்பார்ப்பு :

எதிர்ப்பார்ப்பு :

விளையாட்டாய் ஆரம்பித்து சண்டையில் முடிகின்ற விஷயங்களில் ஒன்று . சின்ன சின்ன விஷயங்களில் கணவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும், கணவர் இந்த பதிலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து அதீத எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பர்.

ஆனால் நம் ஹீரோக்களோ அதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாது நகர்ந்து செல்வார்கள்

மட்டம் தட்டி பேசுதல் :

மட்டம் தட்டி பேசுதல் :

யாராக இருந்தாலும் தன்னை ஒருவர் இகழ்ந்து பேசுகிறார் என்றால் கோபம் வரும். உனக்கெல்லாம் என்ன தெரியும்? என்ற கேள்வி தான் அல்லது அந்த எண்ணம் தான் உங்கள் இருவருக்கிடையில் அன்னியோன்னியத்தை குறைத்திடும்.

தெரியவில்லை என்றாலென்ன சொல்லிக் கொடுக்கிறேன் என்று ஆரம்பியுங்கள் வாழ்க்கையில் இதை விட வேறு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்காது.

உறவுகள் :

உறவுகள் :

இணையர்கள் சண்டையிடக்கூடாது என்று உறுதியாக இருந்தாலும் இந்த உறவினர்கள் என்ற போர்வையில் ஒரு புயல் கிளம்பி வரும்.

யதார்த்தமாய் நடக்கிற விஷயங்களைக் கூட பூதகரமாக பெரிதுபடுத்துவார்கள், அதை நம்பி அவசரத்தில் முடிவு எடுப்பதாலேயே சண்டை வருகிறது.

மறதி :

மறதி :

இப்பழக்கம் ஆண்களிடம் அதிகம் இருக்கிறது. ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு எப்போது எங்கு சொன்னோம் என்ற யோசனை பலருக்கும் வந்து செல்லும்.

மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு இது இரவா பகலா என்று கூட தெரியாமல் பணியில் மூழ்கிக் கிடப்பது ஆண்களின் இயல்புகளில் ஒன்று.

முக்கியத்துவம் :

முக்கியத்துவம் :

எந்த விஷயத்திற்கு எப்போது முக்கியத்துவம் அளிப்பது. இப்போது எது முதன்மையான வேலை என்று முடிவெடுப்பதில் இருவருக்குமே சிக்கல்கள் ஏற்படும்.

நீங்கள் முக்கியமென நினைத்த விஷயம் அவருக்கு முக்கியமென படாது. இது தான் சண்டையின் துவக்கப்புள்ளியாய் இருக்கும்.

ஒத்து வராதா?

ஒத்து வராதா?

கணவன் மனைவி என்றாலே சண்டையிடுவது சகஜம் தான் என்று நம்புவதை முதலில் நிறுத்துங்கள்.

மேற்க்கண்ட காரணங்களை எல்லாம் உணர்ந்து அதனை சரி செய்ய முயற்சி செய்திடுங்கள். அன்பை மூலதனமாக கொண்டு நீங்கள் ஆரம்பிக்கிற எந்த ஒரு செயலும் ஒத்து வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why husband and wife thoughts do not match each other

why husband and wife thoughts do not match each other
Story first published: Saturday, October 7, 2017, 12:04 [IST]
Desktop Bottom Promotion