வீட்டில் மாமியார்-மருமகள் சண்டையை தடுக்க சூப்பர் ஐடியாக்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு திருமண வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பயமே மாமியார் தான். திருமணத்திற்கு பிறகு கூடுதலாகும் பொறுப்புகளில் மாமியர் பங்கும் இருக்கிறது.

அதை விட இந்த சமூகமும் சினிமாவும் மாமியர் மருமகள் என்றாலே சண்டையிடும்,ஓர வஞ்சனை செய்யும் கதாப்பாத்திரங்களாகவே காண்பித்தபடியால் மாமியார் குறித்த பயம் எல்லாருக்கும் இருக்கிறது. அதை விட இந்த உறவு எப்படி நிலைக்கும் என்கிற அச்சமும் மேலோங்குகிறது.

பெண்களே.... மாமியார் உறவுச்சிக்கலை மேம்படுத்தவும் சமாளிக்கவும் சூப்பர் ஐடியாக்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கதை கேளுங்கள் :

கதை கேளுங்கள் :

வயதான காலத்தில் அவர்கள் தங்களிடம் பேச ஆளில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள், அந்த குறையே அவர்களுக்கு பல ஏக்கங்களை உண்டாக்கும். பல பிரச்சனைகளின் ஆரம்பப்புள்ளியாக இது தான் இருக்கும்.

அதனால் தயக்கமின்றி உங்கள் மாமியாரிடம் பேசுங்கள். உங்கள் கணவர் சிறுவயதில் இருந்த போது என்ன செய்தார் என்று கேளுங்கள். சுவாரஸ்யமாக மகனைப் பற்றி பெருமையாக பேசுவார். அதே போல அவரது சொந்த விருப்பங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை எல்லாம் கேளுங்கள்.

யோசனை :

யோசனை :

காய்கறி வாங்குவது, பஸ் வழித்தடங்கள், நேர மேலாண்மை போன்ற சின்ன சின்ன விஷயங்களகாட்டும், குழந்தை பேறு, உறவுச்சிக்கல் என நீங்கள் முடிவெடுக்க தயங்கும் விஷயங்களில் அவரது வழிகாட்டுதலை கேட்டுப் பெறுங்கள்.

அவரின் அனுபவங்கள் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல வழியைக் காட்டும். அதே சமயம் உங்கள் மீது மதிப்பும் அவருக்கு அதிகரிக்கும்.

விருப்பங்களுக்கு மதிப்பு கொடுங்கள் :

விருப்பங்களுக்கு மதிப்பு கொடுங்கள் :

வீடுகளில் சண்டை வருவதே டிவியினால் தான். காலையிலிருந்து டிவி பாக்குறாங்க நான் ஒரே ஒரு சீரியல் பாத்தது தப்பா? என்று விதண்டாவாதம் பேசமால் மாமியாருக்கு பெருமையுடன் விட்டுக் கொடுங்கள்.

நீங்கள் இழுத்துப் பிடித்தால் அவர்கள் முரண்டு பிடிப்பார்கள். இதே போல அவரின் விருப்பமறிந்து செயல்படுங்கள். சின்ன சின்ன பாராட்டுக்கள் உங்கள் உறவை வலுப்படுத்தும்.

கற்றுக் கொடுங்கள் :

கற்றுக் கொடுங்கள் :

மாமியாருக்கு தெரியாத அல்லது அதிகம் பரிச்சயமில்லாத விஷயத்தை நீங்கள் கற்றுக் கொடுங்கள். எடுத்தவுடனேயே அவர்களால் புரிந்து கொண்டு செயல்படுத்த முடியாது

முதலில் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுங்கள். இது உங்கள் உரையாடலை அதிகப்படுத்தும். அன்னியோன்னியத்தை அதிகரிக்கும்.

விசாரிப்பு :

விசாரிப்பு :

வயதானவர்களுக்கு அரவணைப்பு தான் மிகவும் முக்கியம். அவர்களை அக்கறையுடன் விசாரியுங்கள். உடல் நலன் குறித்து, சாப்பிட வேண்டிய மருந்துகள் குறித்து எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

உரிமையுடன் நீங்கள் பேசினால் மட்டுமே தயக்கம் உடைந்து உறவு பலப்படும்.

உறவுகள் :

உறவுகள் :

மற்ற உறவினர்களைக் கொண்டோ அல்லது கணவரினாலோ உங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வரும் பட்சத்தில் அந்த உரையாடலை தவிர்ப்பது தான் நல்லது.

போட்டிக்குப் போட்டியாக நீங்கள் பதில் சொன்னால் சண்டை வளருமே தவிர அவருக்குப் புரியாது. வீணாக உறவு பிளவுப்படுவதை தவிர்க்க நீங்கள் அமைதியாக இருப்பதே நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to winning relationship with your in laws

Tips to winning relationship with your in laws
Story first published: Friday, October 6, 2017, 12:31 [IST]