For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவருக்கு ஆண்மை இல்லாமல் போனதற்கு நான் என்ன செய்ய முடியும்... - My Story #097

அவருக்கு ஆண்மை இல்லாமல் போனதற்கு நான் என்ன செய்ய முடியும்... - My Story #097

|
My Story: His Fertility Illness Affected My Whole Life!

ஆண்மை என்பது யாதெனில்? அஃது கணவனின் ஆண் 'உறுப்பில்' அல்ல... ஆண் 'குணத்தில்' இருக்கிறது என்றே நான் உரைப்பேன்.

சென்னையில் பிறந்து, வளர்ந்த பெண் நான். எங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகளே அதிகம். என் அப்பாவை தவிர, மற்ற அனைத்து அம்மா, பெரியப்பா, அத்தை, அனைவருக்கும் ஆண் குழந்தைகள். நானும், என் தங்கையும் மட்டுமே எங்கள் குடும்பத்தில் இந்த தலைமுறையில் பிறந்த இரண்டே பெண் வாரிசுகள்.

இரண்டே பெண் குழந்தைகள் என்பதாலும், மற்ற அனைவரும் எங்களை விட வயதில் ஆறேழு வயது மூத்தவர்கள் என்பதாலும். நானும், தங்கையும் சிறுவயது முதலே மிகவும் செல்லமாக வளர்ந்தோம்.

அப்பா - அம்மாவை விட எங்கள் மீது அதிக பாசம் காட்டியது அண்ணன்கள் தான். எங்கள் அண்ணன்களும், அவர்களது தோழர்களும் என அவர்கள் எங்கே சென்றாலும் என்னையும், தங்கையையும் கூட்டி செல்வர்கள்.

ஆகையால் 'ஆண்' என்ற உறவு எனது வாழ்வில் சிறுவயது முதலே மிகவும் நெருக்கமானவர்கள். எந்த ஆணிடமும் பேசவோ, பழகவோ, எதிர்த்து கேட்கவே தயங்கியது இல்லை. ஏதாவது பிரச்சனை என்றால் தட்டிக் கேட்க எண்ணற்ற அண்ணன்கள் சென்னை முழுவதும் குவிந்திருந்தனர் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே தைரியம் எனக்கு.

மிகவும் சந்தோசமாக சென்றுக் கொண்டிருந்தது என் வாழ்க்கை. ஆடம்பரமாக செலவு செய்ததில்லை எனிலும், கேட்பவை எல்லாம் ஆதிகபட்சம் கேட்ட இரண்டு நாட்களுக்குள் கைக்கு கிடைத்துவிடும் அளவிற்கு சௌகரியமான வாழ்க்கை.

இந்த மகிழ்ச்சி, சிரிப்பு, சௌகரியம் என அனைத்திற்கும் ஓர் பேரிடி விழுந்தது. ஒரு வகையில் என் வாழ்க்கை திசைமாறி சென்றதற்கு முக்கிய காரணம் எனது தங்கையும் கூட....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் திருமணம்!

காதல் திருமணம்!

எங்கள் குடும்பத்தை பற்றி யோசிக்காத அவள், என்னை பற்றி மட்டும் யோசித்திருப்பாளா என்ன? மூன்றாம் ஆண்டு கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே, அவள் காதலித்து வந்த ஆணுடன் ரிஜிஸ்டர் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், அது எங்களுக்கு தெரியவில்லை.

ஒரு கோடை விடுமுறையின் போது தான், வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போது, எனது தங்கையின் ரெகார்ட் நோட்டில் இருந்து அவளது திருமண சான்றிதழ் கண்டு மயங்கி விழுந்தாள் அம்மா.

அம்மா அழுகை!

அம்மா அழுகை!

நாங்கள் யாரும் அவளை அடிக்கவும் இல்லை, துன்புறுத்தவும் இல்லை. அண்ணன்கள் அனைவரும் அவனை பற்றி விசாரிக்க பைக்குகளில் கிளம்பினர். அவன் வெளியூர் என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளை தனி அறையில் வைத்து அம்மா "ஏண்டீ இப்படி பண்ண..?" என அழுதபடி விசாரித்துக் கொண்டிருந்தாள். அண்ணன்கள் எங்கே காதலனை அடித்துவிடுவார்களோ என அவளுக்கு அச்சம் அதிகமாக இருந்தது.

எனக்கும் திட்டு!

எனக்கும் திட்டு!

அவக் கூடவே இருக்க உனக்கு இதெல்லாம் தெரியாதா? ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிகளா? என அப்பா ஒரு பக்கம் என்னையும் திட்டிக் கொண்டிருந்தார். எனக்கு சத்தியமாக தெரியாது. அவள் ஒருநாளும் வீட்டில் போனில் யாருடனும் பேசியதில்லை. வார இறுதி நாட்களில் எங்களுடன் தான் சினிமா, பீச் என சுற்றிக் கொண்டிருப்பாள். அவளது காதலும், திருமணமும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஓட்டம் பிடித்தாள்!

ஓட்டம் பிடித்தாள்!

அவள் எதுவுமே பேசவில்லை. அண்ணன்கள், அவளது காதலனை கண்டுபிடிக்க முடியவில்லை என வீடு திரும்பினார்கள். அன்று முழுக்க அவள் யாரிடமும் பேசவில்லை. சோகமாகவே அமர்ந்திருந்தாள். ஏதனும் தவறான முடிவு எடுத்துவிட போகிறாள் என அத்தை கூறவே. அவளை தனியாக அந்த அறையில் விட்டுவிட்டு நாங்கள் வந்துவிட்டோம்.

நான் தான் அவளுக்கு உணவு எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன். என்கிட்டயாவது சொல்லிருக்கலாம்ல என.. கேட்டேன் எந்த பதிலும் இல்லை. இரவு உணவும் அவள் சாப்பிடவில்லை. காலை விடிந்த பிறகு போய் பார்த்தாள். பாதகத்தி... வீட்டில் இல்லை. இரவோடு இரவாக அவனுடன் ஓட்டம் பிடித்துவிட்டாள். அது அவளது வாழ்வில் மட்டுமல்ல, எனது வாழ்விலும் பெரும் திருப்புமுனையை உண்டாக்கியது.

இன்ஸ்டன்ட் திருமணம்!

இன்ஸ்டன்ட் திருமணம்!

எங்கே, தங்கையை போல நானும் காதல் திருமணம் செய்துக் கொள்வேனோ என வீட்டாருக்கு அச்சம். நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. எல்லாம் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு என திட்டினார்கள். அவள் கேட்க வேண்டியதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதான் லவ் பண்ணமாட்டல, அப்போ நாங்க பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கோ என கூறினார்கள். எனக்கு அதுநாள் வரை யார் மேலும் காதல் வரவில்லை என்பது தான் உண்மை.

 பலியாடு!

பலியாடு!

என் தங்கையின் காதல் திருமணம், எனக்கு உடனடியாக திருமணம் நடக்க வித்திட்டது. ஒரே வாரத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். அடுத்த மாதமே திருமணம். அவசர திருமணம் என்பதால் என் கணவருடன் திருமணத்திற்கு முன் பேச பெரிதாக சந்தர்ப்பம் அமையவில்லை. எனவே, முதலிரவின் போது, முதலில் இருவரும் ஒருவரை, ஒருவர் புரிந்துக் கொள்வோம். பிறகு இதெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்றேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

மிகவும் நல்லவர்?

மிகவும் நல்லவர்?

எப்படிப்பட்ட ஆணாக இருந்தாலும், இதை தள்ளிப்போட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். குறைந்தபட்சம் பாதுகாப்பு முறைகளுடன் வைத்துக் கொள்ளலாம் என அடம் பிடிப்பார்கள். ஆனால், இவர் நான் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார். மிகவும் நல்லவர் என நினைத்தேன். ஆனால், கதை இங்கே தான் திசை மாறியது. எப்போது பார்த்தாலும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பார். அவருக்கென வீட்டிலும் வேலை செய்ய ஓர் அறை இருந்தது. அதற்குள் சென்றுவிட்டால் அவரை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவு.

நாட்கள் கழிந்தன...

நாட்கள் கழிந்தன...

நானும் பெண்தானே... அனைவருக்கும் ஆசை இருக்க தானே செய்யும். ஏதோ ஒரு சந்தர்ப்பம் உருவாக காத்திருக்கிறார் என நினைத்தேன். என் தோழிகளிடம் விசாரித்த போது. சில ஆண்கள் கூச்ச சுபாவம் கொண்டிருப்பார்கள். நீயாக துவக்கு என யோசனை அளித்தனர்.

நானாக பலமுறை எனது ஆசைகளை செய்கையால் வெளிப்படுத்திப் பார்த்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை. எங்களுக்குள் நூறு இரவுகள் கடந்த பிறகும் முதலிரவு சமாச்சாரம் நடக்கவில்லை.

கடைசியாக...

கடைசியாக...

அவர் எப்போதுமே காலை எழுந்ததும் 7.30 மணிக்கெல்லாம் வேலைக்கு கிளம்பிவிடுவார். இரவு சீக்கிரம் வீடு திரும்பினாலும், நான் இரவு உணவருந்தி உறங்கும் வரை வேலை செய்துக் கொண்டே தான் இருப்பார். இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என தெரியவில்லை. கடைசியாக கூச்சம் அறுத்து கணவன் தானே என ஒரு செயலை செய்தேன்.

இந்த காரியத்தை செய்ய எனக்கு கூச்சமாக இருந்தது. ஆனால், அதைத்தவிர வேறு வழியில்லை. இரவு சீக்கிரமே உணரவருந்திவிட்டு உறங்க சென்றேன். நான் உறங்கி விட்டேன் என நினைத்து அவரும் நான் படுக்கை அறைக்கு சென்ற அரை மணிநேரத்தில் உறங்க வந்தார். நான் எனது ஆடைகளை எல்லாம் கலைத்துவிட்டு, போர்வையை போர்த்திப் படுத்திருந்தேன். அவர் வந்து படுத்த பிறகு, அவரிடம் நெருங்கினேன்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

சரி அவருக்கு கூச்சம் போல என நினைத்து நான் செய்த காரியத்தின் விளையவாக எனக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. அவர் என்னை அந்த கோலத்தில் கண்டவுடன். எழந்து சென்றுவிட்டார்.

எனக்கு அது முற்றிலும் அதிர்சியாக இருந்தது. ஒருவேளை நான் செய்த காரியம் புடிக்கவில்லையோ என கருதினேன். பிறகு தான் தெரிந்தது..., அவருக்கு இந்த செயலிலேயே விருப்பம் இல்லை என.

பிரிவு!

பிரிவு!

அதன் பிறகு அவர் என்னுடன் ஒரே அறையில் உறங்க கூட தயாராக இல்லை. அவர் வேலை பார்க்கும் அறையில் தனிக் குடித்தனம் நடத்த துவங்கினார். இது என்னை மிகவும் வாட்டியது. என் மேல் தான் தவறென நினைத்து , நினைத்து வருந்தினேன். பார்ப்பவர்கள் எல்லாம் என்ன விசேஷமா? என கேட்கும் போது... போலியாக சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவேன். இந்த எண்ணங்களின் தொகுப்பு என்னுள் மன அழுத்தத்தை அதிகரித்த காரணத்தால் ஒரு வாரம் விடுப்பு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டேன்.

வேலை!

வேலை!

நாள் முழுக்க வேலை செய்து பழகிய கால்களால் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை. மூன்றாவது நாள் மிகவும் மந்தமாக நகர்ந்தது. சரி வீட்டை சுத்தம் செய்யலாம் என யோசித்தேன். முதலில் அவரது உடைகள் வைத்திருந்த பீரோவை சுத்தம் செய்யலாம் என வேலையை துவக்கினேன். அப்போது தான் ஓர் அடுக்கின் கீழே ஒரு மருத்துவ பரிசோதனை கோப்புகள் என் கைகளில் சிக்கியது. அது என் வாழ்வில் இடியாய் விழுந்தது.

ஆண்மை இல்லை!

ஆண்மை இல்லை!

அவர் என்னை வெறுத்து ஒதுக்க நான் காரணம் இல்லை. அவரது உடல்நிலை தான் என அந்த கோப்பை படித்த போது அறிந்தேன். அது இரண்டாண்டுகளுக்கு முன்னர் செய்த பரிசோதனை என்பது அதில் இருந்த தேதியை வைத்து அறிந்தேன். பிறகு ஏன் என்னை திருமணம் செய்துக் கொண்டார் என எரிச்சல் அடைந்தேன். மாலை வரை கண்களில் நீர் நிற்காமல் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

இரண்டு நாள் எதுவும் சமைக்கவில்லை. அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வார இறுதி!

வார இறுதி!

வார இறுதி நாளில் மனதில் ஒரு மாற்றம் தென்பட்டது. செக்ஸ் மட்டும் தானா வாழ்க்கை. எத்தனையோ குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை தத்தெடுத்து வளர்த்துக் கொள்ளலாம் என எண்ணினேன். இது குறித்து அவரிடம் பேச முற்பட்டேன்.

வார இறுதி... அன்று சனிக்கிழமை. 11 மணி இருக்கும். அப்போது தான் அவர் எழுந்தார். காபியுடன் சென்று அவர் முன் அமர்ந்தேன்.

"நாம் வேண்டுமானால் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டேன்.

"ஏன்?" என கேட்டார்.

ஒருநிமிட அமைதிக்கு பிறகு....

"எப்படியும் நம்மால் முடியாது. அதனால்..." என இழுத்தேன்.

"என்ன முடியாது" என முறைத்தப்படி பார்த்தார். என்னுள் அச்சம் தொற்றிக் கொண்டது.

மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு. "உங்கள் மருத்துவ பரிசோதனை கோப்புகளை நான் படித்தேன்" என கூறினேன்.

*பளார்.....* என விழுந்தது அடி.

ஒரு வாரமா இதுக்கு தான் வேலைக்கு போகாம இருந்தியா? ஆமா, என்னால முடியாது அதுக்கு என்னடி...? என்ன அடிகள் சரமாரியாக விழத் துவங்கியது.

நாட்கள் மோசமாகின...

நாட்கள் மோசமாகின...

அதன் பிறகு அவர் குடிக்க துவங்கினார். சில நேரங்களில் அடியும் விழுகும். அவரால் முடியாது என்பது குற்றமா? அல்லது அதை நான் அறிந்துக் கொண்டேன் என்பது குற்றமா? என தெரியவில்லை. நாளுக்கு, நாள் இல்லறம் மோசமானது. அரக்கன் போல சில சமயங்களில் நடந்துக் கொண்டார்.

நான் எதுவும் தவறாக கேட்டுவிடவில்லை. அவரது நிலையை புரிந்துக் கொண்டு தான் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாமா? என கேட்டேன். ஆனால், தனது குறையை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு ஏன் என்னை திருமணம் செய்ய வேண்டும்?

விவாகரத்து!

விவாகரத்து!

ஒரு வருட காலம் இப்படியே ஓடியது. வீட்டை விட்டு ஓடிய என் தங்கை முதல் குழந்தை பிறந்த பிறகு வீடு திரும்பினால். என் வீட்டாரும் அவளை ஏற்றுக் கொண்டனர். ஆனால், நான்? என் வாழ்க்கை?

பரஸ்பர விவாகராத்துக்கு நீதிமன்றம் நாடியுள்ளோம். இருவர் வீட்டிலும் காரணம் கேட்கிறார்கள். அவரால் முடியாது என்றோ, அவர் என்னை சித்திரவதை செய்தது குறித்தோ நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவரது நிலைமையை என்னால் புரிந்துக் கொள்ள முடியும்.

இப்படியான ஓர் ஆணை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதையும் நான் அறிவேன். கருத்துவேறுபாடு என கூறி விவாரகரத்து வழக்கு தொடர்ந்துள்ளோம். இன்னும் நான்கு மாதங்களில் விவாகரத்து கிடைத்துவிடும்.

ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா!

இனியும், இதே ஊரில் இருக்க விருப்பமில்லை. பிறந்த ஊர் என்பதால் மட்டுமல்ல... என் வாழ்வின் அனைத்து சந்தோஷ நிகழ்வுகளும் நடந்த இடம் என்பதால் எனக்கு சென்னை என்பது மிகவும் நெருக்கமான ஊர்.

ஆனால், இனியும் இதே ஊரில் இருக்க விருப்பமில்லை. என் வாழ்வில் கொடுமையான நிகழ்வுகளும் இதே இடத்தில் தான் இருக்கிறது. விவாகரத்து பெற்ற கையோடு ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளேன்.

விசா, பாஸ்போர்ட், வேலை என அனைத்தும் முடிவாகிவிட்டது. என் வாழ்வின் இரண்டாவது இன்னிங்க்ஸ் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: His Fertility Illness Affected My Whole Life!

My Story: His Fertility Illness Affected My Whole Life!
Desktop Bottom Promotion