தன் இன்பமயமான உறவின் ரகசியங்களை கூறிய கஜோல்!

Posted By:
Subscribe to Boldsky

தனது துறையில் முதன்மை நாயகியாக வளம் வந்துக் கொண்டிருந்த போது கஜோல் அஜய் தேவ்கானை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் செய்துக் கொண்ட போது கஜோலின் வயது 25. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன.

என்னதான் ஒருபுறம் வேலை, தொழில் முக்கியம் என்றாலும், சரியான வயதில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதில் கஜோல் சரியான முடிவை எடுத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேலை - குடும்பம்!

வேலை - குடும்பம்!

வேலை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குடும்பமும் முக்கியம். கஜோல் திருமணத்திற்கு முன்னர் வருடத்திற்கு நான்கைந்து படங்கள் நடித்து வந்தார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என அஜய் தேவ்கனுக்கு வாக்களித்தார். இதனால், தான் இல்லறத்திலும் போதுமான அளவு நேரம் செலவழிக்க முடியும் என கருதினார்.

கஜோல் - அஜய், இருவரின் இல்லறம் 18 வருடங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இடைவேளை

இடைவேளை

திருமணத்திற்கு முன் ஒன்பது வருடங்களாக நடித்து வந்தார் கஜோல். திருமணத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் என கூறிய போதும். ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டார் கஜோல்.

இந்த நேரத்தில் ஒரு அமைதி அவருக்கு தேவைப்பட்டது. அதே போல தனது குடும்பத்தில் தனது பங்கை உணர்ந்து நல்ல மனைவியாகவும் விளங்கினார் கஜோல்.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி!

திருமணத்திற்கு பிறகு, நடிப்பை காட்டிலும், இல்லறத்தில் மனைவி, தாய் என தனது பங்கு பெரியது என்பதை உணர்ந்த கஜோல். ஒரு சிறந்த துணையாக தனது கடமையை கடைப்பிடித்து வந்தார்.

அதே போல, பிள்ளைகள் ஒரு வயதை எட்டிய பிறகு, மீண்டும் தான் நடிக்க சரியான நேரம் ஒதுக்கி, மீண்டும் தனது நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி, வேலையிலும் சிறந்து விளங்கினார்.

புரிந்துக் கொள்ளும் கணவர்!

புரிந்துக் கொள்ளும் கணவர்!

ஒரு பிரபலமாக இருந்துக் கொண்டு, வீடு, நடிப்பு என இரண்டையும் சமாளிப்பது மிகவும் கடினம். இந்த தருணத்தில் தான் அஜய் தேவ்கான் கஜோலை சரியாக புரிந்துக் கொண்டு அவர் அழுத்தம் இன்றி தனது வேலைகளை செய்ய பெரும் காரணியாக இருந்தார்.

விவாகரத்து தான்...

விவாகரத்து தான்...

அஜய் மற்றும் கஜோல் திருமணம் செய்துக் கொண்ட போது, பலரும் இவர்களது திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என புரளி பேசினார்கள். ஆனால், அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல 18 ஆண்டுகள் வெற்றிகரமாக சந்தோசமான தம்பதியாக, மற்ற நட்சத்திர ஜோடிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் கஜோல் மற்றும் அஜய்.

இரகசியம்!

இரகசியம்!

எங்கள் உறவு மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம், நான் அதிகம் பேசுவேன், அஜய் அமைதியாக அதை பொறுமையுடன் கேட்பார் என கூறுகிறார் கஜோல்.

இந்த சூப்பர் ஜோடிக்கு நைசா மற்றும் யாக் எனும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

kajol Devgan Reveals Secret of Her Love Life!

kajol Devgan Reveals Secret of Her Love Life!
Subscribe Newsletter