For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கைத்துணையை பிரிந்தவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை என்ன தெரியுமா?

குழந்தைகளை வழிநடத்தும் மிக முக்கிய பொறுப்பு அவர்களின் பெற்றோருக்குத் தான் இருக்கிறது.ஆனால் தன் இணையை பிரிந்து தனியாக வாழ்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்.

|

நம் வாழ்க்கையில் இடையில் சேரும் உறவு அடுத்து வரப்போகிற நாட்கள் முழுமைக்கும் உடனிருக்கும் என்று சொல்ல முடியாது. பல்வேறு காரணங்களால் இணையை பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தனியாக இந்த வாழ்க்கையை சந்திக்கும் அதே வேலையில் உங்களின் குழந்தையையும் தனியொருவராக பராமரிக்க வேண்டும். அப்படி சிங்கிள் பேரண்ட்டாக இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் சில..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரம் :

நேரம் :

வீடு,வேலை என இரண்டையும் சமன் செய்ய பாடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். குழந்தைகளுக்காக,தங்களுக்காக என நேரம் செலவிடுவதே அபூர்வமாக இருக்கும். தன்னுடைய வேலை குறித்தெல்லாம் சிந்திக்கவோ அல்லது நேரம் செலவிடவோ முடியாது.

பணம் :

பணம் :

மிகப்பெரிய பிரச்சனை இது. பணப்பிரச்சனை, தனியாளாக பணத் தேவைகளை சமாளிக்க வேண்டும். மருத்துவம்,கல்வி,வீட்டுச் செலவுகள் என அவர்களுக்கு தேவைப்படும் பணத்திற்காக உழைக்க வேண்டியிருக்கும்.

குழந்தைகள் :

குழந்தைகள் :

வேலைக்குச் சென்றுவிட்டு வந்தபிறகு குழந்தைகளையும் வாரி அணைத்து கொஞ்சுவதற்கு பலருக்கும் நேரமிருப்பதில்லை . பிறரை நம்பி நம் குழந்தையை விட்டுச் செல்வதும் கடினம் அதனால் வரும் மனரீதியான பதட்டங்களை தினந்தோறும் சந்திக்க வேண்டி வரும்.

பழக்க வழக்கம் :

பழக்க வழக்கம் :

குழந்தைகளின் நடத்தையில்,அவர்களது பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். எப்போதுமே தனிமையில் இருக்க நேர்வதால் மன அழுத்தம் உண்டாவது, அடிக்கடி கோபப்படுவது, படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பது போன்ற சிக்கல்கள் ஏற்படும். ஆண்குழந்தைகள் என்றால் டாமினேட்டிங் கேரக்டர்களாகவும், பெண் குழந்தைகள் என்றால் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும் வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

தனக்கான நேரம் :

தனக்கான நேரம் :

உங்களுக்கென்ற ஒர் தனிமை கிடைக்காது. உங்கள் உடலை பராமரிக்க, உங்கள் பிடித்த விஷயங்களை செய்வதற்கு, உங்களுடைய நண்பர்களுடன் வெளியில் செல்வதற்கு என எதுவுமே முடியாது. எப்போதும் பரபரப்பாக எச்சரிக்கை உணர்வுடன் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

குற்றவுணர்வு :

குற்றவுணர்வு :

சிங்கிள் பேரண்டிங் பொறுப்பை ஏற்றிருப்பவர்களுக்கு, பிறரிடம் உதவி கேட்பதில் தயக்கம் இருக்கும். இந்த உதவி வாங்குவதால் அவருக்கு கடமைப்பட்டவர்களாகிவிடுவோமா அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்படுவோமா? அல்லது இதனை கேட்பதால் அவர்களுக்கு நாம் பாரமாக இருப்போமா என்ற குற்றவுணர்வு இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Challenges facing by single parenting

Challenges facing by single parenting
Story first published: Saturday, August 19, 2017, 14:33 [IST]
Desktop Bottom Promotion