தாம்பத்தியத்தின் போது இந்த உணவுப் பொருட்களை பயன்படுத்த கூடாது, மகப்பேறு மருத்துவர் ஆலோசனை!

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியத்தின் போது ஒருசிலர் அதிக இன்பம் அடைய பல செயல்களை கையாள்வது உண்டு. ஆனால், அதில் சிலவன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பண்புகள் கொண்டுள்ளன.

முக்கியமாக இவை பெண்களின் பிறப்புறுப்பில் இன்பெக்ஷன் உண்டாக்கக் கூடியவை என்பதால் தம்பதியினர் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்வீட் / சாஸ்

ஸ்வீட் / சாஸ்

ஜெல்லி, தேன், பீனட் பட்டார், போன்ற சுவையூட்டி உணவுகளை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது பயன்படுத்த கூடாது என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது பெண்களின் பிறப்புறுப்பில் தாக்கம் உண்டாக்கலாம். முக்கியமாக பெண்ணுறுப்பில் ஈஸ்ட் போன்ற பாக்டீரியா தொற்று உண்டாக இனிப்பி உணவுகள் காரணியாக இருக்கின்றன.

பழங்கள், காய்கறிகள்!

பழங்கள், காய்கறிகள்!

பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் போது பெண்ணுறுப்பில் இன்பெக்ஷன் எளிதாக உண்டாக வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிறியளவிலான காய்கறி, பழங்கள்.

ரஹ்மான் எனும் மகப்பேறு மருத்துவர் ஒருசில தருணத்தில் கிரேப்ஸ் போன்ற பழங்கள் பயன்படுத்தி விபரீதம் ஆகி சிகிச்சைக்கு வந்தவர்களும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் என்னதான் காய்கறி, பழங்களை கழுவினாலும் கூட இவ்வகை உணவுகளில் எளிதாக மீண்டும் பாக்டீரியா தொற்று எளிதாக ஒட்டிக்கொள்ளும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மசாலா பொருட்கள்!

மசாலா பொருட்கள்!

சில வினோதமான தம்பதிகள் இனிப்பு சுவை சார்ந்த மசாலா பொருட்களை பயன்படுத்து பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது இன்பெக்ஷன் உண்டாகி சிகிச்சைக்கு வருகின்றனர்.

எக்காரணம் கொண்டும் இவ்வகை உணவுகளை தாம்பத்தியத்தின் போது பயன்படுத்த வேண்டாம் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அலர்ஜி உண்டாக்கும் உணவுகள்!

அலர்ஜி உண்டாக்கும் உணவுகள்!

ஒவ்வொரு தனி நபருக்கும் அவரது உடல் கூறு சார்ந்து ஏதேனும் உணவை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு அலர்ஜி உண்டாகும்.

அவ்வகையான உணவுகளை தாம்பத்தியத்தின் போது பயன்படுத்த வேண்டாம், இவை கடுமையான சரும பிரச்சனைகளை உண்டாக்கும் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய்!

எண்ணெய்!

தம்பதிகள் மத்தியில் வலியில்லாமல் தாம்பத்தியத்தில் ஈடுபட எண்ணெய் பயன்படுத்தும் முறை இருக்கலாம். ஆனால், பெண்ணுறுப்பில் எண்ணெய் பயன்படுத்தும் போது அதை முற்றிலுமாக நீக்க முடியாது.

மேலும், இது பாக்டீரியாக்கள் எளிதாக அவர்கள் பிறப்புறுப்பில் அதிகரிக்க காரணியாக இருக்கின்றது. எனவே, கண்ட எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம் என மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆல்கஹால்!

ஆல்கஹால்!

நம் நாட்டில் இல்லை எனிலும், மேல்நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் பழக்கம் தான் இது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னர் சாம்பெயின் போன்ற மதுவை பீறிட்டு அடித்து மகிழ்வதுண்டு.

ஆனால், இதுபோன்ற மது வகைகள் பெண்ணுறுப்பில் படமால் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருக்கும் கெமிக்கல் பொருட்கள், பெண்ணுறுப்பில் எரிச்சல் உண்டாக காரணியாக அமையலாம்.

வெப்பம் அதிகமான உணவுகள்!

வெப்பம் அதிகமான உணவுகள்!

சிலவகை உணவுகள் சூட்டை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருக்கும். இவ்வகை உணவுப் பொருட்களை பயன்படுத்துவது, மென்மையான உட்சருமம் கொண்டுள்ள பெண்ணுறுப்பில் எதிர்மறை தாக்கங்கள் உண்டாக்கும்.

தாம்பத்தியத்தில் அதிக இன்பம் பெற தம்பதிகள் இவ்வகையான நடவடிக்கைகளை கையாள்கின்றனர். இன்பெக்ஷன் உண்டாகதவண்ணம் செயற்படுவதில் தவறில்லை. தம்பதினர் சில சமயத்தில் இன்பெக்ஷன் ஆனாலும் ஆரம்பத்தில் மருத்துவரை அணுகாமல், கடைசி கட்டத்தில் அணுகுவது தான் பெரும் தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Ways People Use Food During Intercourse That You Never Should

Seven Ways People Use Food During Intercourse That You Never Should, a gynecologist advice.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter