ஸ்டார் ஜோடி சூர்யா - ஜோ தம்பதி பற்றி பலரும் அறியாத 8 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய திரையுலகில் பல நடிகர் - நடிகைகள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக, எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்தும் காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா - ஜோ.

ரசிகர்கள் பலருக்கே இவர்களை போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த அளவிற்கு மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி சூர்யா - ஜோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

ஜோதிகா வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. ஒரு வார்த்தை கூட உச்சரிக்க தெரியாமல் இருந்த ஜோதிகாவிற்கு ஆரம்ப காலத்தில் தமிழ் கொஞ்சம், கொஞ்சம் கற்பித்தது சூர்யா தான். பிறகு திருமணத்திற்கு பிறகு, மாமியாரிடம் முழுமையாக தமிழ் கற்றுக்கொண்ட ஜோ, இப்போது தமிழ் நாட்டில் பிறந்த வளர்ந்தவர் போல தமிழ் சரளமாக பேசுகிறார்.

உண்மை #2

உண்மை #2

சூர்யா தொடர் தோல்வியால் துவண்டிருந்த காலக்கட்டத்தில். கவுதம் மேனன் காக்க, காக்க திரைக்கதை அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஜோ தான் நடிகை என்று தீர்மானம் ஆகியிருந்தது. ஜோ பரிந்துரைத்ததால் தான் அதில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. ஜோவின் கணிப்பு போல படமும் சூப்பர் ஹிட்டானது. காக்க, காக்க சூர்யாவின் திரை பாதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

உண்மை #3

உண்மை #3

சூர்யா ஜோதிகா பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் போது சூர்யா தொடர் தோல்விகள் கண்டுள்ளார் என ஜோவுக்கு தெரியவந்தது.

ஷூட்டிங் அருகில் தான் ஒய்.எம்.சி மைதானத்தில் சூர்யா பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறார் என தெரியவர, தனது அசிஸ்டெண்ட்டை அனுப்பி, சூர்யாவிடம் பேச வேண்டும் என கேட்டுவர கூறினார். சூர்யா அதற்கு மறுக்கவே, நேரடியாக உடனே சென்று அவருடன் பேசி, தொடர்பு எண் வாங்கி திரும்பினார். இதற்கு பிறகு தான் இவர்கள் மத்தியில் காதல் மலர்ந்தது.

உண்மை #4

உண்மை #4

ஜோவின் ராசிக்கல்லானது ஓபல் எனப்படும் ஒருவகையான அரிய மாணிக்கக்கல். திருமணம் முடிந்து சூர்யா - ஜோ வெனிஸ், இத்தாலி சுற்றுபயணம் மேற்கொண்ட போது அவர்கள் ஓபல் மாணிக்க கல்லை பார்த்தனர். ஆனால், வாங்கவில்லை. ஊர் திரும்பிய பிறகு அதே போன்ற கல்லை வாங்கி ஜோவிற்கு பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார் சூர்யா.

உண்மை #5

உண்மை #5

ரத்த சரித்திரம் படத்தில் முதலில் இந்தி தெரியாது என நடிக்க மறுத்தார் சூர்யா. பிறகு ஜோ தான் சூர்யாவிற்கு குறுகிய காலத்தில் இந்தி கற்பித்து, அவரை சரளமாக இந்தி பேச வைத்தார். இந்த காலத்தில் ஒரு இந்தி வாத்தியாரும் சூர்யாவிற்கு இந்தி கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #6

உண்மை #6

சூர்யா - ஜோவிற்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் தேவ் வளர்ப்பு ஜோவின் கடமை என்றும், தியாவை வளர்ப்பது சூரியாவின் கடமை என்றும் இருவரும் ஒரு கோட்பாடு வைத்துள்ளனர். குழந்தைகள் பிறந்த பிறகு ஜோ நடிக்க மறுத்த காரணம், சிறந்த நடிகையாக இருப்பதை காட்டிலும், சிறந்த தாயாக இருக்க வேண்டும் என அவர் விரும்பியது தான்.

உண்மை #7

உண்மை #7

திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்வதாக தான் முன் திட்டம் இருந்துள்ளது. ஆனால், ஜோ திருமணத்திற்கு பிறகு எல்லாரும் இன்றாக கூட்டுக் குடும்பமாக தான் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார்.

உண்மை #8

உண்மை #8

எல்லாருக்கும் ஏதாவது ஒரு உணவு அல்லது பானத்தின் மீது அதீத பிரியம் இருக்கும். ஜோவிற்கு கேப் காபி டே மீது அதிக விருப்பம். ஸ்ட்ராங் காபி குடிப்பது என்றால் ஜோவிற்கு அதிகம் பிடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Lesser Known Facts About Suriya Jyothika Star Couple

Amazing Lesser Known Facts About Amazing Lesser Known Facts About Suriya Jyothika Star Couple
Story first published: Saturday, November 26, 2016, 11:30 [IST]