For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டீபன் ஹாக்கிங்கின் 2 காதல் கதைகளும், அனுபவித்த கொடுமைகளும்!

பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் 2 காதல் கதைகளும், அனுபவித்த கொடுமைகளும்!

By Staff
|

காம்ப்ரிட்ஜில் தனது டிகிரி ப்ரோக்ராம் துவங்கிய சில நிமிடங்களில் தான் முதன் முறையாக தனது வருங்கால துணையை கண்டார் ஸ்டீபன் ஹாக்கிங். ஒரு அறிவார்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹாக்கிங். இவரது அப்பா ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர், அம்மா பொருளாதாரம் படித்தவர். கணக்கும், அறிவியலும் ஹாக்கிங் இரத்தத்தில் ஊறிய விஷயம்.

தனது 17வது வயதில் (1959ல்) ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் நுழைகிறார் ஸ்டீபன் ஹாக்கிங். ஹாக்கிங்கிற்கு அவர் தேர்வு செய்த துறை சார்ந்த கல்வி பயில பெரும் சிரமங்கள் எதுவும் இல்லை. ஆகையால், படிக்கும் நேரத்தை காட்டிலும் நிறைய நேரம் பலருடன் பழகுவதில் செலவழித்தார். அப்படி இருந்தும் ஹாக்கிங் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு, அடுத்த மூன்றாண்டில் டாக்ட்ரேட் பயில துவங்கினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்தாண்டு கொண்டாட்டம்!

புத்தாண்டு கொண்டாட்டம்!

அன்று காம்ப்ரிட்ஜில் புத்தாண்டு கொண்டாட்டம். அப்போது ஜேனை சந்திக்கிறார் ஹாக்கிங். ஜேன் ஹாக்கிங்கின் சகோதரிகளில் ஒருவரின் தோழி. அவர் இலக்கியம் படித்து வந்த மாணவி ஆவார். அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் ஹாக்கிங்கும், ஜேனும் அதிகம் சந்தித்துக் கொள்ள துவங்கினார்கள். அவர்களது பெரும்பாலான சந்திப்புகள் கல்வி சார்ந்திருக்கவில்லை. இருவர் மத்தியிலும் காதல் ஊற்றேடுகிறது.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

ஹாக்கிங் ஆக்ஸ்போர்டில் தனது கடைசி ஆண்டை கழித்து வந்த போதுதான். அவரிடம் சில விசித்திரமான அறிகுறிகள் தென்படுகின்றன. அவர் படிஇறங்கி வரும் போது வினோதமான முறையில் இறங்கி வருவார். அவரது உடலில் ஏதோ மாற்றங்கள் தென்பட்டன. உறவினரும், நண்பர்களும் அவரை உற்று கவனிக்க துவங்கினார்கள்.

பரிசோதனை!

பரிசோதனை!

1962ன் இறுதி அது, ஹாக்கிங் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அப்போது தான் அவருக்கு இருக்கும் உடல்நலக் கோளாறு கண்டறியப்பட்டது. ஹாக்கிங்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவரது ஆயுட்காலம் மிகவும் குறைவு, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தான் தாக்குப்பிடிப்பார் என்று கை விரித்தனர்.

ஜேன்!

ஜேன்!

இத்தகைய நேரத்தில் எந்தவொரு பெண்ணாக இருந்தாலும், அந்த ஆணை விட்டு விலக தான் நினைப்பால். ஆனால், ஜேன் ஹாக்கிங்குடன் இருக்கவே விரும்பினார். அவருடன் எப்போதும் உறுதுணையாக இருந்தார். ஹாக்கிங்கை, அவரது உடல்நல குறைபாடு அறிந்த பிறகு தான் திருமணம் செய்துக் கொண்டார் ஜேன்.

கடன் வாங்கிய பொழுதுகள்...

கடன் வாங்கிய பொழுதுகள்...

ஹாக்கிங்... தான் ஜேனுடன் கடன் வாங்கப்பட்ட நேரத்தை செலவழித்து வாழ்ந்து வருவதாக கருதினார். எப்போது வேண்டுமானாலும் தன் முடிவு நெருங்கலாம் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. ஜேனுக்கு தான் ஹாக்கிங்கின் மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

ஆரம்பத்தில் ஊன்றுகோல் கொண்டு நடந்து வந்த ஹாக்கிங்கின் உடல்நலம் கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்படைந்து வந்தது. 1969ல் அவர் முழுமையாக சக்கர நாற்காலியில் தான் இனி என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

முக்கிய காரணம்...

முக்கிய காரணம்...

மருத்துவர்கள் கூறிய இரண்டு ஆண்டுகளை கடந்து, ஹாக்கிங் நீண்ட காலம் வாழ்ந்ததற்கு காரணம் ஜேன் தான். அவரது காதலும், அரவணைப்பும் தான் ஹாக்கிங் அறிவியலில் பல சாதனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்த்த முக்கிய பங்காக இருந்தது. அவர் ஹாக்கிங்கை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்.

எழுத்தும், குரலும்!

எழுத்தும், குரலும்!

1975ல் மெல்ல, மெல்ல ஹாக்கிங்கின் எழுதும் திறன், மற்றும் பேசும் திறன் குறைய துவங்கியது. அந்த ஆண்டின் இறுதியிலேயே அவர் பேச்சு யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளானது. எழுதவும் முடியாமல் போனார் ஹாக்கிங். பிளாக் ஹோல் குறித்து ஹாக்கிங் ஆய்வு செய்துக் கொண்டிருந்த காலம் அது.

மரணத்தை நெருங்கினார்...

மரணத்தை நெருங்கினார்...

1985ல் நிமோனியா தாக்கம் ஏற்பட்டு லைப்-சப்போர்ட் நிலைக்கு தள்ளப்பட்டார் ஹாக்கிங். ஜேன் அவரை விட்டு விலக தயாராய் இல்லை. அவர் இறக்கும் வரை உடன் இருப்பேன் என்று உறுதியுடன் இருந்தார். ஜேனின் காதல் மற்றும் மருத்துவர்களின் சிகிச்சையால் ஹாக்கிங் மீண்டு வந்தார்.

நேரத்தின் வரலாறு...

நேரத்தின் வரலாறு...

நிமோனியாவில் இருந்து மீண்டு வந்த ஹாக்கிங் 1988ல் தனது "எ பிரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்"ஐ வெளியிட்டார். அந்த காலக்கட்டத்தில், அதிக விற்பனையாகி பெரும் சாதனைப் படைத்தது. ஹாக்கிங்கின் அந்த சாதனை மற்றும் புகழ், ஜேனை பெரும் மகிழ்ச்சியடைய செய்தது.

விவாகரத்து!

விவாகரத்து!

ஆனால், ஹாக்கிங் - ஜேன் இல்லற வாழ்க்கை அப்படியே தொடரவில்லை. இவர்கள் இருவரும் பிரியும் தருணம் உருவானது. தனக்கு பேச்சை வெளிப்படுத்தம் கருவியை (Speech Synthesiser) உருவாக்கி தந்த தேவின் மேசன் என்பவரின் மனைவியும், நர்சுமான எலைன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

யார் இந்த எலைன் மேசன்?

யார் இந்த எலைன் மேசன்?

எலைன் மேசன் ஹாக்கிங்கை கவனித்துக் கொள்வதற்கு முன்னர் வங்காளதேசத்தில் பணிபுரிந்து வந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் பிறகு, ஹாக்கிங்கின் ரசிகரும், மருத்துவருமான டேவிட் மேசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஹாக்கிங்கை கவனித்து வந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டாகி, பிறகு ஹாக்கிங் ஜேனை பிரிந்த பின் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

விவாகரத்து!

விவாகரத்து!

எலைன் மற்றும் ஹாக்கிங்கின் திருமண வாழ்க்கையும் 11 ஆண்டுகளில் (2006ல்) முடிவுக்கு வந்தது. இவர்களது விவாகரத்துக்கான காரணாம் தெளிவாக இல்லை. எலைன் தரப்பில், ஹாக்கிங் பிற பராமரிப்பாளர்களுடன் பழகி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறப்பட்டது. இதை ஹாக்கிங்கின் செயலாளர் வன்மையாக மறுத்தார்.

கொடுமை!

கொடுமை!

ஆனால், ஹாக்கிங் சுற்றத்தில் இருந்தவர்கள், எலைன் மருத்துவம் செய்கிறேன் என்ற பெயரில் உடல் அளவிலும், மன அளவிலும் உலகின் சிறந்த அறிவியலாளரை துன்புறுத்தி கொடுமை செய்து வந்தார் என்று கூறினார்கள். எலைன் மீது இந்த குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்பட்டது.

மறுப்பு!

மறுப்பு!

ஆனால், ஹாக்கிங் இதுக்குறித்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால், 2000ல் ஹாக்கிங் அறுப்பு காயங்களுக்கு மருத்துவம் செய்ய மருத்துவமனை சென்றார். இது ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஹாக்கிங் பதில் அளிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஹாக்கிங்கின் மகள் லூசி தனது தந்தைக்கு தவறான மருத்துவம் செய்யப்படுவதாக புகார் எளிதார்.

குற்றங்கள்!

குற்றங்கள்!

அப்போது எலைன் மேசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன...

  1. ஹாக்கிங்கின் மணிக்கட்டு பகுதியை சக்கர நாற்காலியில் அடித்து உடைத்தது.
  2. ஹாக்கிங்கிற்கு சிறுநீர் கழிக்கும் பாட்டிலை பொருத்தாமல், அவர் தன் மீதே சிறுநீர் கழிக்க செய்து, அந்த ஈரத்துடன் இருக்க செய்தது.
  3. பிளேடு காயங்கள் ஏற்படுத்தியது.
  4. குளிக்கும் போது, கீழே விழ செய்து, அவர் சுவாசிக்கும் குழாய்க்குள் நீர் புக முயற்சி செயடஹ்து.
  5. வெப்பம் அதிகமாக இருந்த நாளில், அவரை வெயிலில் தனியாக விட்டு, சூட்டினால் ஹீட்ஸ்ட்ரோக் உண்டாக்க முயற்சித்தது,

என பல குற்றங்கள் சுமத்தப்பட்ட போதிலும், எலைன் மேசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Love Stories of Stephen Hawking

Here is the lesser known love story of great scientist Stephen Hawking and his love lady Jane Hawking.
Desktop Bottom Promotion