நான்கு வகையான ஆண்களும், ஒரு பெண்ணும் - உண்மை கதை!

Posted By:
Subscribe to Boldsky

நான் அப்போது 12ம் வகுப்பு பயின்று வந்தேன். அப்போது தான் என்னை முதன் முதலில் ஒருவன் காதலிக்கிறான் என்பது அறிந்தேன். எனக்கும் அவனை பிடித்திருந்தது. ஆனால், காதல் எல்லாம் இல்லை. இதை நானே அவனிடம் கூறிவிடலாம் என யோசித்தேன். ஆனால், கூறவில்லை.

அவனால் என்னிடம் காதலை கூறாமல் இருக்க முடியவில்லை. என்னிடம் அவனது காதலை கூறினான். நான், காதலை ஏற்க முடியாது, வேண்டும் என்றால் நண்பர்களாக இருப்போம் என கூறினேன். எங்கள் நட்பு தொடர்ந்தது. பள்ளி முடிந்த பிறகு அவனொரு பாதையில் சென்றுவிட்டான். நான் ஒரு பாதையில் சென்றுவிட்டேன். அதன் பிறகு எங்களுக்கு பெரிதாக பழக்கம் ஏதுமில்லை.

இது தான் என் மீது ஒருவன் காதல் கொண்ட முதல் அனுபவம். பிறகு எனக்கு ஒருவர் மீது காதல் வந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் காதல்...

முதல் காதல்...

எனது கல்லூரி காலம் அது. அவனும் என்னுடன் கல்லூரியின் கடைசி நாட்களில் இருந்தான். கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் எனக்கு அவன் மீது காதல் வந்தது. நாங்கள் இருவரும் காதலித்தோம், டேட்டிங் சென்றோம்.

காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய சூழல் உண்டானது. எங்கள் இறுதி தேர்வுகளுக்கு முன்னர் எனது வேலை பற்றி தந்தையிடம் பேசினேன். அவர், நான் பேசி முடிப்பதற்குள் தடுத்து.

அடுத்தது உனது வாழ்வில் திருமணம் தான். ஒரு குடும்பத்தை பாதுகாக்க வேண்டும், குழந்தை பெற்று செட்டிலாக வேண்டும் என ஆணையிட்டு சென்றுவிட்டார்.

தொடை நடுங்கி காதலன்...

தொடை நடுங்கி காதலன்...

ஒரு மார்வாடி பெண்ணாக பிறந்ததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதோ என்ற கவலை இருந்தது. எனது காதலனுக்கு கால் செய்தேன். என் தந்தையிடம் பேசி, நமது திருமணத்திற்கு சம்மதம் வாங்கு என்றேன். அவனிடம் கெஞ்சி, அழுது கேட்டேன். அவன், தவறாக அப்படி ஏதும் ஆகாது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மட்டும் தான் கூறினானே தவிர, என் தந்தையுடன் பேச தயாராக இல்லை.

வருங்கால கணவன்...

வருங்கால கணவன்...

என் தந்தை ஒருவருடைய போட்டோவை நீட்டி, இவன் தான் நீ திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆண் என்றார். என் காதலன் வந்து தந்தையிடம் பேசுவதாக இல்லை. என் தந்தை தேர்வு செய்த வீட்டாரை காண சென்றோம்.

ஆரம்பக் காலத்தில் மிகவும் கனிவாக பேசினார்கள். என்னை மிகவும் பரிவாக நடத்தினார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள் என கருதினேன். என் நிச்சயம் முடிந்தது. என் வருங்கால கணவர் வீட்டாரின் சுயரூபம் மெல்ல, மெல்ல சாயம் வெளுக்க துவங்கியது.

கேள்வி, மேல் கேள்வி...

கேள்வி, மேல் கேள்வி...

நிச்சயம் முடிந்த பிறகு, அப்படியே நேர்மாறாக நடந்துக் கொண்டனர். நான் பேசும் அடுத்த வார்த்தையில் இருந்து, அடுத்த என்ன செய்கிறேன் என்பது வரை அவர்கள் அனைத்தும் அறிய வேண்டும் என எண்ணினார்கள். நான் என்ன செய்கிறேன், சாப்பிடுகிறேனா? குளிக்கிறேனா? எங்கே செல்கிறேன், யாரை பார்க்கிறேன், யாருடன் பேசுகிறேன், யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறேன் என கேள்வி, மேல் கேள்வி.

கடைசியாக நீ கற்புடன் தான் இருக்கிறாயா? என்றும் கேட்டனர்.

அப்பாவிடம் சென்றேன்...

அப்பாவிடம் சென்றேன்...

அப்பா, அவர்கள் கேள்வி மேல், கேள்வி கேட்டு என்னை இப்போதே மிகவும் சித்திரவதை செய்கிறார்கள். எனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்றேன். திருமணத்தை தட்டிக்கழிக்க பொய் கூறுகிறேன் என அப்பாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நான் கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை என்பது எனக்கு மிகுந்த மன வேதனையும், மன அழுத்தத்தையும் கொடுத்தது.

என்.ஜி.ஓ!

என்.ஜி.ஓ!

என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியாக ஒரு என்.ஜி.ஓ-விடம் ஓடி சென்று தஞ்சம் புகுந்தேன். என் பெற்றோர்கள் என்னை கண்டுபிடித்தனர். பிறகு, என்னை திருமணத்திற்கு நிர்பந்தம் செய்ய மாட்டோம் என சத்தியம் செய்து கொடுத்தார்கள்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன... மீண்டும் எனது பெற்றோர் வேறு ஒரு ஆணை காண்பித்து இவனை திருமணம் செய்துக் கொள்கிறாயா என கேட்டனர். அப்போது எனக்கு வயது 23. எனக்கு மீண்டும் அதே உணர்வு, அதே அச்சம்.

மீண்டும் ஒரு குடும்பத்தை சென்று பார்த்து, வாழ்க்கையை இழக்க எனக்கு மனதளவிலும், உடலளவிலும் தைரியம் இல்லை.

சந்தித்தோம்...

சந்தித்தோம்...

ஆனால், கடைசியில் வேறு வழி இன்றி, அப்பா கூறிய அந்த நபரை சந்தித்தோம். அவர் மிகவும் கச்சிதமான ஆணாக இருந்தார். எங்கள் நிச்சயம் முடிந்தது. நிச்சயம் முடிந்த இரண்டு மாதங்கள் ஆகின.., என்னால் இயல்பாக பழக முடியவில்லை. ஏதோ ஒன்று அசௌகரியமாக இருந்தது. ஏதோ, சரியாக இல்லையோ என்ற உணர்வு எழுந்துக் கொண்டே இருந்தது.

ஏன்?

ஏன்?

ஏன் இப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது என யோசித்துக் கொண்டே இருந்தேன். ஒருவேளை அந்த ஆண் என்னைவிட ஏழு வயது மூத்தவர் என்பதால் இந்த அச்சமா என் கேள்வி எழுந்தது. வயது ஒரு தடையாக இருக்குமா? என குழம்பினேன்.

நான் அவருடன் சில முறைகள் மட்டுமே பேசியிருந்தேன். அவர் என்னிடம் ஒரு குழந்தையோடு பேசுவது போல உரையாடினார். அவர் என் மீது ஆதிக்கம் செலுத்துவது போல இருந்தது. அது சரியாக இருக்காது என எண்ணினேன். இது உறவுக்குள் ஒரு சமநிலையை ஏற்படுத்தாது என்ற கருத்து என்னுள் இருந்தது.

மீண்டும் அவன்...

மீண்டும் அவன்...

இந்த காலகட்டத்தில் நான் ஒருவனுடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன். என்னை முதன் முதலில் காதலித்த அந்த 12ம் வகுப்பு தோழன். அவன் இப்போது அமெரிக்காவில் Chef-ஆக வேலை செய்துக் கொண்டிருக்கிறான். அவன் பல வகைகளில் எனக்கு உறுதுணையாக இருந்தான். எப்போதெல்லாம் நான் மன அழுத்தம் கொள்கிறேனோ.. அப்போதெல்லாம் அவன் தான் என்னை தெளிவுப்படுத்துவான்.

புரிதல்...

புரிதல்...

அவன் என்னை மிகவும் புரிந்து வைத்திருந்தான். நான் என்ன பேசினால் சிரிப்பேன், என்ன பேசினால் அழுவேன் என அனைத்தும் அறிந்திருந்தான். அவனது சிரிப்பு என்னை சுற்றிலும் இருந்தது.

நாட்கள் ஒவ்வொன்றாக நகர, நகர நான் ஒன்று உணர்ந்தேன்... ஆம்! நான் அவன் மேல் காதல் கொண்டேன். எனக்கு தெரியும் இது என் வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என.

என் குடும்பத்தாரும் இது பற்றி தெரிந்தால் மிகவும் கோபப்படுவார்கள். ஆனால், அவனைவிட்டு நகர எனக்கு விருப்பம் இல்லை.

ஏழு வருடங்கள் கழித்து...

ஏழு வருடங்கள் கழித்து...

சரியாக ஏழு வருடங்கள் கழித்து..., அவன் நான் எப்படி 12ம் படிக்கும் போதிருந்தேனோ... அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தான். எனது வாழ்க்கை வரலாறு முற்றிலும் அறிந்தவன். என் குடும்பம் இதற்கு ஒப்புக்கொள்ளாது என்பதையும் அறிவேன். அவனும் இதை புரிந்திருந்தான்.

என குடும்பம் எங்கள் காதலுக்கு ஒப்புதல் வழங்கும் வரை நான் காத்திருப்பேன், உன்னுடன் இருப்பேன் என கூறினான்.

சிந்தனை...

சிந்தனை...

என்மேல் ஆதிக்கும் செலுத்தும் ஆணுடன் எப்படி வாழ்நாள் முழுக்க செலவழிப்பது. அதில் என் மகிழ்ச்சி எப்படி அடங்கியிருக்கும் என பல கேள்விகள். என் இதயம் சொல்வதையே கேட்டு, அதன் படி நடந்தேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் அவன் இந்தியா திரும்ப முடிவு செய்தான். நான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஒரு இரகசிய இடத்தில் தங்கியிருந்தன். நாங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டோம்.

எங்கள் வீட்டில் நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம் என்பதை கூறிய பிறகு, திரும்பி வந்தோம். அவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் வலியையும் நான் உணர்வேன். ஆனால், எங்கள் குடும்பத்தில் எங்களை ஏற்றுக் கொண்டனர். எங்கள் மீது அதிக காதலை வெளிப்படுத்தினர்.

உண்மை காதல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஓர் நாள் ஒன்று சேரும் என்பதை அன்று தான் உணர்ந்தேன். கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Story: At Last I Got A True Love For My Life!

Real Story: At Last I Got A True Love For My Life!
Subscribe Newsletter