தாம்பத்தியத்தில் பெண்களை உச்சம் அடைய வைக்க உதவும் நான்கு டிப்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே பெண்களை தாம்பத்திய உறவின் போது முழுமையாக உச்சம் அடைய வைப்பது கடினம் எனும் ஓர் கருத்து நிலவுகிறது. இது உண்மை தான் பல அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும் கண்டறிந்துள்ளனர். இது, பெண்களின் உடற்கூறு சார்ந்தது. இது ஒன்றும் குறையில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உறவில் பெண்கள் உச்சமடைவதை குறித்த 3 மூடநம்பிக்கைகள்!

உண்மையில், ஆண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, மிக விரைவாக உச்சம் அடைந்துவிடுகிறார்கள். பெண்கள் அப்படியில்லை. அவர்களுக்கு சற்று நேரம் எடுக்கும். இதை தான் பெரும்பாலும், அனைவரும் பெண்கள் உச்சம் காண்பதில்லை என கூறிவருகிறார்கள்.

பெண்கள் ஏன் 'அந்த' விஷயத்தில் நடிக்கிறார்கள்?

பல ஆய்வுகளில் பொதுவாக கூறப்பட்டுள்ள கருத்து என்னவெனில், பெண்கள் உச்சம் அடையவில்லை எனில் ஒன்று அது மருத்துவ ரீதியான காரணமாக இருக்க வேண்டும் அல்லது ஆண்களின் செயற்பாடுகளாக இருக்க வேண்டும். பெண்களை உச்சம் அடைய வைக்க இந்த நான்கு வழிகளை பின்பற்றினால், மன ரீதியாக அவர்களை தயார் செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

இன்று தாம்பத்திய உறவில் ஈடுபடும் முன்னரே, நீங்கள் சென்ற முறை உறவில் ஈடுபட்ட போது நடந்த நிகழ்வுகள் பற்றி நினைவு கூர்வது, அது பற்றி பேசுதல், பெண்கள் தயாராகவும், அவர்களை உச்சம் அடைய வைக்கவும் உதவும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

நேராக உடலுறவில் ஈடுபடும் முன்னர், சில கொஞ்சல்களும், செல்ல தீண்டுதல்களும் அவசியம். இது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பெண்கள் தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட உதவும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

உடலுறவில் ஈடுபடும் முன்னர் குளிப்பது நல்லது. இது உடல் துர்நாற்றம் இல்லாமல் இருக்க உதவும். மேலும், அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக குளிப்பது உடல் ரீதியான இணைப்பை அதிகரிக்க உதவும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

எக்காரணம் கொண்டும், உங்கள் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றை உறவில் ஈடுபடும் போதும், சரி, அதற்கு முன்னும் சரி வைக்க வேண்டும். உறவில் ஈடுபடும் போது ஸ்மார்ட்போனில் இருந்து மெசேஜ், கால்கள் வருவது உங்கள் துணையின் கவனத்தை சிதற வைக்கும்.

குறிப்பு!

குறிப்பு!

முக்கியமாக, இன்று நீங்கள் உறவில் ஈடுபட விரும்புகிறீர்கள் எனில், எக்காரணம் கொண்டும் உங்கள் துணையை மனரீதியாக வருந்தும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டாம். இது அவர்களை முழுவதுமாக மூட்அவுட் ஆக்கிவிடும்.

குறிப்பு!

குறிப்பு!

மேலும், காலையில் திட்டிவிட்டு, இரவில் எந்த சமாதானமும் இன்று, உறவில் ஈடுபட அழைப்பது உங்கள் மீதான அன்பை குறைக்க செய்யும். மற்றும் நீங்கள் தாம்பத்ய உறவிற்காக மட்டும் இணைய விரும்புவது போன்ற தீய எண்ணம் உண்டாக காரணியாக இது அமையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Speed Up Your Orgasm with These 4 Hot Tips

Speed Up Your Orgasm with These 4 Hot Tips , read here in tamil.
Story first published: Friday, June 24, 2016, 14:24 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter