ஏன் குழந்தையை பற்றி பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் நண்பர் வட்டாரத்தில் யாரேனும் காதலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார் எனில், அவருடன் ஒரே ஒருநாள் இரவு அவரது காதலியுடன் தொலைப்பேசியில் பேசும் போது அருகில் இருந்து பாருங்கள், அத்துடன் உங்கள் வாழ்க்கையில் நடந்த அத்தனை துயரங்களும் கால் தூசுக்கு சமம் என்ற எண்ணம் பிறந்துவிடும்.

"ஹ்ம்ம்.., ஆஹ்... " என்று மணிக்கணக்கில் பேசி சிலர் சாகடித்தால், "உனக்கு என்ன குழந்தை பிடிக்கும் ஆணா? பெண்ணா?" என்று பேசி சிலர் நோகடிப்பார்கள். சிங்கிளாக இருக்கும் சிங்கங்களுக்கு மட்டுமே தெரியும் இது எத்தனை பெரிய துயரம் என்று. நாம் இங்கு புரோட்டாவுக்கு சால்னா பத்தவில்லை என்று குமுறிக் கொண்டிருக்க, இவர்கள் அவர்களது காதலுக்கு நம்மை ஊறுகாய் ஆக்கிக்கொண்டு இருப்பார்கள்.

ஆயினும், ஆண்கள் அடிக்கடி குழந்தையை பற்றி மட்டுமே பேசினால், பெண்களுக்கும் கூட சில சமயங்களில் காண்டாகிவிடுகிறார்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போதும் அதே பேச்சு

எப்போதும் அதே பேச்சு

உங்கள் நண்பர்கள் மத்தியில், ஏன் நீங்களே கூட இவ்வாறு பேசியிருக்கலாம். காதலியுடன் உரையாடும் போது, நமக்கு இத்தனை குழந்தைகள் வேண்டும், ஆண் குழந்தை, பெண் குழந்தை இத்தனை என ஓர் பட்டியலிட்டு கொஞ்சி பேசும் சுபாவம் ஆண்களுக்கு உண்டு. ஆனால், எப்போதும் இதை பற்றியே பேசும் போது பெண்களுக்கு வெறுப்பு அதிகமாகிறது.

இதற்காக தான் அதே காதலா

இதற்காக தான் அதே காதலா

மேலும், காதலிப்பது என்பது தன்னை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தானா என்ற எண்ணமும் பெண்கள் மத்தியில் எழும். பொதுவாகவே பெண்கள் மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இதையெல்லாம் கூறவா வேண்டும்.

தங்கள் மீது நாட்டம் குறைவு

தங்கள் மீது நாட்டம் குறைவு

நிறைய பெண்கள் குழந்தைகளை பற்றியே ஆண்கள் பேசினால், தங்கள் மீது அவர்களுக்கான நாட்டம் குறைந்துவிட்டதோ என எண்ண தொடங்கிவிடுகிறார்கள். (நாட்டம் அதிகமானா தானே குழந்தைகள் பற்றி யோசிக்க தோணும்..!!!!)

தவறான கண்ணோட்டம்

தவறான கண்ணோட்டம்

தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் எண்ணத்தில் தான், குழந்தைகள் பற்றி அடிக்கடி அவன் பேசுகிறானோ என்றும் பெண்கள் எண்ணுகிறார்கள்.

பெண்களின் எதிர்பார்ப்பு

பெண்களின் எதிர்பார்ப்பு

பொதுவாகவே பெண்களுக்கும் ஆண்களை போலவே குழந்தைகள் மீது ஆசை இருக்கும். ஆனால், இயற்கையாகவே பெண்கள் திருமணத்திற்கு பிறகு, ஏன் குழந்தை பிறந்த பிறகும் கூட, குழந்தையைவிட தன் மேல் தான் கணவன் அதிக அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புவர்கள். இது ஒருவகையான காதலின் மிகுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Women Hate When Men Use Baby Talk

Women Hate When Men Use Baby Talk
Please Wait while comments are loading...
Subscribe Newsletter