உடலுறவு கொள்ளும் முன்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்று என கருதப்படுவதினால் நீங்கள் தினசரி பயிற்சி மேற்கொள்வேன் என்று அடம்பிடிக்க கூடாது. "அப்பறம் குளிர் காலத்துல பானைய உடச்சுட்டு, வெயில் காலத்துல குடிக்க தண்ணி இல்லாம கஷ்ட படுற மாதிரி நிலைமை ஆயிடும்..." இதெல்லாம் நமக்கு தேவையா?

எப்போ எல்லாம் உடலுறவு வெச்சுக்கிறது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?

பெண்கள் தங்கள் துணைக்கு நல்ல ஆணை தான் எதிர் பார்க்கின்றனரே தவிர உங்களது ஆண்மையின் வீரியத்தை அல்ல என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

படுக்கையில் ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!!

எங்கோ ஆங்கில படத்தில் சில காட்சிகள் பார்த்துவிட்டு எசக்கபிசக்க ஏதாவது செய்து விழிக்காமல். நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என முதலில் கற்றுக்கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மென்மை தேவை

மென்மை தேவை

உடலுறவுக்கு முன்பு உங்கள் துணையுடன் மென்மையாக பேசி, அவர்களது உடலை இலகுவாக செய்ய வேண்டும். இதை பெரும்பாலான ஆண்கள் செய்வது இல்லை.

துர்நாற்றம்

துர்நாற்றம்

நம் நாட்டில் பலரும் செய்யும் முதல் தவறு இது, உடலுறவுக் கொள்ளும் முன்பு சுத்தமாக, உடல் துர்நாற்றம் இன்றி இருக்க வேண்டும். அந்த இடத்தில் "கப்பு" அடித்தால் எப்படி இருக்கும். இருபாலரும் இந்த செய்யும் தவறை செய்வதை தவிர்க்க வேண்டும்.

வாய்

வாய்

முத்தம் தான் உடலுறவை தொடைக்கி வைக்கும் முதல் கியர். எனவே, உங்கள் வாயையும் சேர்த்து நன்கு கழுவிய பின் உடலுறவில் ஈடுப்படுவது முக்கியம்.

மன நிலை

மன நிலை

அந்த இடத்தில நீங்கள் அலுவலக பிரச்சனை அல்லது சமூக பிரச்சனை என கண்டதை பேசுவது உங்களது உறவை மொக்கை ஆக்கி விடும். எனவே உங்கள் மன நிலையை சரியான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் வேறு எதையும் நினைத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.

கடிப்பது

கடிப்பது

உடலுறவுக் கொள்ளும் முன்பு அதற்கு தயாராவது முக்கியம். அதற்காக சில வேலைகளில் ஈடுப்பட வேண்டும். ஆனால், நம்ம ஊர் பெண்கள் இந்த கடிக்கும் விஷயத்தை எல்லாம் விரும்புவது இல்லை. எனவே, ஆண்கள் இதை தவிர்க்க வேண்டும்.

நிறைய சாப்பிட வேண்டாம்

நிறைய சாப்பிட வேண்டாம்

உடலுறவுக் கொள்ள போகிறீர்கள் என தெரிந்த பின்பு ஆண்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இது பல வகைகளில் உங்கள் உடலுறவை பாதிக்கும்.

குடிப்பது

குடிப்பது

பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சமாக வெறுக்கும் செயல் என்பது குடித்து விட்டு உடலுறவில் ஈடுப்படுவது. இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கிறது

வாக்குவாதம்

வாக்குவாதம்

இன்றிரவு உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுப்பட விருப்பமாக இருக்கும் ஆண்கள் முதலில் தேவையற்ற பேச்சுகளை இன்றிரவு பேசாது பார்த்துக் கொள்ளுங்கள். ஆண்களுக்கு அவர்களது நாக்கில் தான் சனி.

 முதல் முறை

முதல் முறை

முதல் முறை உடலுறவில் ஈடுப்படும் ஆண்கள். நேரம் எடுத்துக் கொள்வது நல்லது. பெண்கள் சற்று தயக்கத்துடன் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கான நேரத்தை கொடுத்து நீங்கள் உடலுறவை ஆரம்பிக்க வேண்டும்.

சுய இன்பம்

சுய இன்பம்

உடலுறவிற்கு முன்பு சுய இன்பம் காண்பது விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் என கூறுவார்கள். இது அனைத்து சமயங்களிலும் உதவும் என கூற முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men Should Prepared On These Things Before Having Inter Course

Certain people not getting prepared well before having inter course that may break down your feel. So, men should be well prepared on these things before going to bed.
Subscribe Newsletter