For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்கப்போற 'இந்த' வகை காதலால் உங்க வாழ்க்கையே தலைகீழா மாறிடுமாம்!

இந்த வகையான காதல் என்பது ஆசை மற்றும் பாலியல் பற்றியது. இது மிகவும் உற்சாகமானது மற்றும் நீங்கள் மற்றொரு நபரிடம் ஈர்க்கப்படும்போது அனுபவிக்க முடியும்.

|

காதல் என்பது வர்ணிக்க முடியாத ஒன்று. ஒருவர் மீது இருவர் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு அவர்களை ஒன்றாக காதலர்களாக இணைக்கிறது. காதல் இல்லாத இடமே இல்லை. காதலிக்க மனிதர்களே இல்லை எனலாம். காதலால் தான் இவ்வுலகம் இயங்கி கொண்டிருக்கிறது என்று கூறினால், அது மிகையாகாது. நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது அன்பை அனுபவித்திருப்போம். உறவுகளுக்கு ஏற்ப அன்பின் தன்மை மாறுபடும். இது நம்மை ஒரே நேரத்தில் அழகாக, பாதிக்கப்படக்கூடிய, உற்சாகமாக, பதட்டமாக உணர வைக்கிறது.

Types of love you will probably experience in this life

இருப்பினும், காதல் பல்வேறு வகையானது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அது சாத்தியம்! வெவ்வேறு நபர்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை காதலில் விழுந்தவர்களுக்கு, அனுபவங்கள் வித்தியாசமாக இருக்கலாம். இதைப் பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் அன்பின் வகைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிற்றின்ப காதல்

சிற்றின்ப காதல்

இந்த வகையான காதல் என்பது ஆசை மற்றும் பாலியல் பற்றியது. இது மிகவும் உற்சாகமானது மற்றும் நீங்கள் மற்றொரு நபரிடம் ஈர்க்கப்படும்போது அனுபவிக்க முடியும். மேலும், மற்றொரு நபரிடம் சிற்றின்ப அன்பை உணர நீங்கள் காதல் உறவில் இருக்க தேவையில்லை. அடிப்படையில், இது காமம் மற்றும் உடல் ஈர்ப்பு ஆகியவற்றால் உருவாவது. இது அந்த ஈர்ப்பு இருக்கும் வரை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

MOST READ: 'இந்த' விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணா... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் சந்தோஷமா இருக்குமாம்!

சூழ்ச்சி காதல்

சூழ்ச்சி காதல்

இந்த வகையான அன்பில் நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள். இதில், ஒருவர் அல்லது இரு தரப்பினரும் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்ள தொடர்ந்து பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளியை கையாளுவதன் மூலம் எரிச்சலூட்டுகிறார்கள், தங்களைப் பற்றி மோசமாக உணர்கிறார்கள், மேலும் அவர்கள் செய்வதையும் செய்யாததையும் கட்டுப்படுத்துகிறார்கள். இது பெரும்பாலும் இருவரையும் தனிமையில் இருப்பதை விட தனிமையாக உணர வைக்கும்.

வெறித்தனமான காதல்

வெறித்தனமான காதல்

இதில், ஒரு நபர் உறவில் இருப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையிலும் இதயத்திலும் எப்போதும் காலியான வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கிறார். இவை பெரும்பாலும் இணை சார்பு உறவுகளில் ஈடுபடுகின்றன. ஏனென்றால் அவர்கள் தங்கள் பங்குதாரர் தேவை என்று உணர்கிறார்கள். தங்கள் துணை இல்லாமல் அவர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள்.

தன்னலமற்ற அன்பு

தன்னலமற்ற அன்பு

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அல்லது அதற்கு ஈடாக ஏதாவது ஒன்றை நீங்கள் ஒருவருக்கு கொடுக்கும்போது தன்னலமற்ற காதல் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு உன்னதமான காரணத்திற்காக முன்வருகிறீர்கள் அல்லது நீங்கள் மிகவும் அக்கறை கொண்ட ஒருவருடன் உறவில் இருக்கும்போது இந்த அன்பை உணரலாம். இது ஒரு ஆன்மீக அன்பு.

MOST READ: பெண்களே! உங்க கணவன் உடலுறவில் இருமடங்கு இன்பம் பெற உங்களிடம் இதை தான் விரும்புகிறார்களாம்...!

பிளாட்டோனிக் காதல்

பிளாட்டோனிக் காதல்

பிளாட்டோனிக் காதல் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கலாம். ஆனால் அதன் சாராம்சம் தோழமை. இது ஒரு சிறப்பு வகையான அன்பு மற்றும் பொதுவாக உங்கள் நண்பர்களை உள்ளடக்கியது. அவர்கள் உங்கள் நிறை மற்றும் குறைபாடுகளைப் பார்க்கிறார்கள். ஆதலால், உங்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள்.

சுய அன்பு

சுய அன்பு

இது உங்களுக்காக நீங்கள் வைத்திருக்கும் அபிமானம் மற்றும் மென்மையாக விவரிக்கப்படலாம். இது உங்கள் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை பற்றியது. மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு இது அவசியம். மிக முக்கியமாக, வேறொருவரை நேசிப்பதற்கு முன்பு நீங்கள் உங்களை நேசிக்க வேண்டும்.

குடும்ப அன்பு

குடும்ப அன்பு

குடும்பத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உணர்வுகள் காதலன் அல்லது நண்பனிடம் உள்ள உணர்வுகளிலிருந்து வேறுபட்டவை. அவை ஆழமாக ஓடுகின்றன மற்றும் பெரும்பாலும் நிபந்தனையற்றவை. ஒரு நபர் எப்படி நடந்துகொள்கிறார் அல்லது அவர் யார் என்பதைப் பொறுத்தது அல்ல, குடும்பம் உங்களைப் போலவே உங்களை நேசிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types of love you will probably experience in this life

Here we are talking about the types of love you will probably experience in this life.
Story first published: Thursday, August 12, 2021, 18:38 [IST]
Desktop Bottom Promotion