For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவில் பாதுகாப்பற்றவராக ஆண்கள் நினைக்க என்ன காரணம் தெரியுமா?

உங்கள் துணையுடன் ஒரு பாதுகாப்பான இணைப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

|

உங்கள் துணை உறவில் பாதுகாப்பற்றதாக உணருவது சாதாரணமான காரியமில்லை. இருப்பினும், பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பின்மை பற்றி தெரிவதே இல்லை. சில குறைபாடுள்ள நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் தங்கள் துணையுடன் நெருங்கி பழகி உறவை வளர்ப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கின்றன. அந்த பாதுகாப்பற்ற தன்மைகள் இருப்பது துணையின் தவறில்லை.

Things that make men feel insecure in a relationship

நீங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருந்தால், ஒரு உறவில் நீங்கள் தேடும் தொடர்பைப் பற்றி உறுதியாக இருந்தால், அவற்றைக் கடந்து செல்லவும், உங்கள் உறவை மாற்றவும் வழிகளைக் கண்டுபிடிக்கலாம். ஒரு உறவில் பாதுகாப்பின்மை அறிகுறிகளை பெரும்பாலான ஆண்கள் உணரவில்லை என்பதால், பொதுவான சில விஷயங்களை இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் காதலி மற்றவரை பாரட்டுவது

உங்கள் காதலி மற்றவரை பாரட்டுவது

உங்கள் காதலி அல்லது மனைவி வேறு எந்த ஆணின் தோற்றத்தையும், வெற்றிகளையும் பாராட்டினால், அது பெரும்பாலான ஆண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். இதை அவர்களால் உணரமுடியாது. உங்கள் காதலன் அதை நீண்ட காலமாகத் தனது மனதில் இருந்து வெளியேற விடமாட்டார்.

தங்களுடைய துணை தன்னை மட்டுமே பாராட்ட வேண்டும் என்பது ஒருவிதமான மனநிலை. வேறொரு ஆணை பார்த்து நீங்கள் இன்று அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினாள். அப்போது நீங்கள் அழகாக இல்லை என்று உங்களை தாழ்ந்ததாக உணரக்கூடாது. பாராட்டுவது என்பது மனித இயல்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு புரிந்துகொண்டால் பாதுகாப்பற்ற மனநிலை உங்களுக்குள் தோன்றாது.

பாலியல் திறன்

பாலியல் திறன்

அழகு என்பதை வெளித்தோற்றமாக மட்டும் நினைத்துக்கொள்ளாமல், எண்ணங்களையும் நடத்தைகளையும் கொண்டு பார்க்க வேண்டும். தான் அழகாக இல்லை என்ற எண்ணத்தை விட வேறு எந்த விஷயம் ஆண்களை பாதுகாப்பற்றதாக உணர வைக்கின்றது என்றால், அது பாலியல் திறன். ஆண்கள் தொடர்ந்து தங்களுடைய பாலியல் செயல்திறனைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

இதுகுறித்து ஆண்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் துணையுடன் ஒரு பாதுகாப்பான இணைப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் உடல் நெருக்கத்தின் போது கூட உணர்ச்சி ரீதியான தொடர்பைத்தான் விரும்புகிறார்கள். நீங்களாக எந்த முடிவும் எடுத்துக்கொள்ளாமல் உங்கள் துணையிடம் கேளுங்கள். அவர்களுக்கு உடலுறவின்போது எந்தமாறி செயல்கள் பிடித்திருக்கிறது என்று. அதன்படி, நீங்கள் உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தலாம்.

MOST READ: உடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததைபோல நடிப்பதற்கு இதுதான் காரணம்...!

முன்பு ஏமாற்றப்பட்டவராக இருக்கலாம்

முன்பு ஏமாற்றப்பட்டவராக இருக்கலாம்

முதலில் ஒருவரை காதலித்து, அதில் தோல்வியடைந்திருந்தால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பீர்கள். இந்த பிரிவினைக்குப் பிறகு மீண்டும் ஒருவரை காதலிக்கும்போது, கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளால் அவர் தொடர்ந்து மிரட்டப்படலாம். இதை நினைத்து நிகழ்கால உறவில் பாதுகாப்பற்றதாக உணர தேவையில்லை.

கடந்த கால உறவின் பிரிவிற்கு என்ன காரணம் என்பதை யோசிக்க வேண்டும். பின்னர் அவர்களின் தவறான கருத்துக்களை சரிபார்க்கத் தொடங்கலாம். உங்கள் துணையுடன் இதுகுறித்து நீங்கள் உரையாடலாம். கடந்த கால உறவு உங்களுக்கு கசப்பான நினைவுகளை தந்ததால், நிகழ்கால உறவும் அவ்வாறு தரும் என்று பயப்படத் தேவையில்லை. எல்லா பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களை விட வெற்றிகரமாகச் செயல்படும் மனைவி

உங்களை விட வெற்றிகரமாகச் செயல்படும் மனைவி

வெற்றிகரமான மற்றும் பொருளாதார ரீதியாக நிலையான ஆண்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டிய ஒரு சூழலை உடைக்க சில பெண்கள் முயற்சி செய்துவருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கணவனை விட மனைவி வெற்றிகரமாக மாறினால் அவர்களின் ஆழ்மனதில் உருவாகும்

பாதுகாப்பின்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது. நீங்கள் வெற்றி பெற்றால் அது தன்னுடைய வெற்றியாகக் கருதும் மனைவிகளின் வெற்றியையும் அவ்வாறு எடுத்துக்கொண்டு பாராட்டினால் உறவு மேலும் வலுவாகும்.

மனைவியின் முன்னாள் காதலன்

மனைவியின் முன்னாள் காதலன்

பெண்களே நீங்கள் உறவில் இருக்கும்போது, உங்களுடைய முன்னாள் காதலன் மீண்டும் வந்து உங்களுடன் நண்பராக இருக்க வேண்டும் என்று கூறினாள், அவரை நம்ப வேண்டாம். இது உங்கள் நிகழ்கால உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதில், பெண்களோ அல்லது ஆண்களோ யாராக இருந்தாலும், கடந்த காலத்தில் உங்களுடன் உறவில் இருந்தவர்கள் நிகழகால வாழ்க்கையில் நண்பராக இருப்பதை தவிர்க்க வேண்டும். இது கடந்த கால நிகழ்வுகளை உங்களுக்கு நியாபகபடுத்திக்கொண்டே இருக்கும். இதனால் நிகழ்கால உறவில் உங்களால் மகிழ்ச்சியாக உங்கள் துணையுடன் வாழமுடியாது.

பெரும்பாலான ஆண்களின் ஆழ்மனதில் தனது காதலி அல்லது மனைவியை முன்னாள் காதலுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இது மிகுந்த தவறான செயல். உங்கள் துணை தனது முன்னாள் காதலனுடன் தொடர்பிலிருந்தால், அவள் இன்னும் அவனை காதலிக்கிறாள் என்று அர்த்தமல்ல என்பதையும் ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

MOST READ: உங்களுக்கு உடல் எடை குறையணுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!

ஆண் நண்பர்களுடன் பழகுவது

ஆண் நண்பர்களுடன் பழகுவது

உங்களுடைய மனைவிக்கோ அல்லது காதலிக்கோ ஆண் நண்பர்கள் இருப்பதில் தவறில்லை. இது அவர்களுடைய உரிமை சார்ந்த விஷயம். ஆதலால், ஆண் நண்பர்களுடன் உங்கள் துணை கணிசமான நேரத்தைச் செலவிட்டால் அல்லது அவர்களுடன் அடிக்கடி பேசினால், அதைப் பற்றி மிகவும் நேர்மையாக இருங்கள். உங்கள் மனைவியை அல்லது காதலியை சந்தேகம் கொள்ளாதீர்கள். இது உங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும்.

அதேபோல ஆண்கள் நண்பர்களுடன் பேசுவது பற்றி உங்கள் துணையிடம் பொய் சொல்வது, உங்களை சந்தேகிக்க போதுமான காரணங்களை மட்டுமே தரும். எனவே, பெண்கள் ஆண் நண்பர்களைக் கொண்டிருப்பது தவறில்லை. ஆனால் அவர்களைப் பற்றிப் பொய் சொல்வது ஒரு காதலனை அல்லது கணவனை உறவில் பாதுகாப்பற்றதாக உணரச்செய்யும்.

மிகவும் ரகசியமாக இருக்கும் போது...

மிகவும் ரகசியமாக இருக்கும் போது...

நீங்கள் ஒரு ஆழமான சிந்தனையாளராகவோ அல்லது உறவில் இணைவதற்கு பயந்து, நெருங்கி வர விரும்பாதவராகவோ இருந்தால், நீங்கள் கவலைப்பட ஒரு காரணம் இருக்கலாம். உங்கள் நடத்தையே உங்கள் துணையிடம் நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் என்று உணர்த்திவிடும்.

பெரும்பாலான ஆண்கள் உணராதது என்னவென்றால், ஒரு பெண் தன் காதலனை தன்னுடைய நெருங்கிய வட்டத்திற்குள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பாதுகாப்பாக உங்களிடம் உணர வேண்டும். அந்த பாதுகாப்பு, நம்பிக்கையை நீங்கள் உங்கள் காதலியிடம் அல்லது மனைவியிடம் விதைக்கும்போது, உங்களுக்குள் எந்த ரகசியமும் பாதுகாக்கப்படாது.

இந்த காரணங்களுக்காகத்தான் நீங்கள் உங்கள் துணையிடம் பாதுகாப்பற்றதாக உணர்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களைப் போக்கி, தேவையில்லா பயத்தை விடுத்து, நம்பிக்கையுடன் காதலியுங்கள். ஆண்களே உங்கள் உறவு மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் எப்போதும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things that make men feel insecure in a relationship

Do you know that Things that make men feel insecure in a relationship.
Story first published: Friday, November 29, 2019, 12:40 [IST]
Desktop Bottom Promotion