For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலிச்சு கஷ்டப்படுறதைவிட சிங்கிளாக இருப்பதே மேல். ஏன் தெரியுமா ?

|

முரட்டு சிங்கிளா இருக்கிறோம் என்பதற்கு பின்னால் அவனுக்கு பெண்களே கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல. சிங்கிளாக இருப்பது எவ்வளவு சந்தோசமான விசயம் தெரியுமா? சொந்தமா வீடு இருக்கனும்னு அவசியம் இல்லை. 30000 - 40000 சம்பளம் வாங்கனும்னு எந்த அவசியமும் இல்லை.

Relationship

காலையில் எழுந்து சேவல் மாதிரி கொக்கரிக்க வேண்டியது இல்லை. இராத்திரி தூங்கப்போகும் போது ஆந்தை மாதிரி கொட்டக் கொட்ட முழிச்சிருந்து குட் நைட் சொல்லத் தேவையில்லை. பத்தாக்குறைக்கு நாய் மாதிரி பகல்ல பாதுகாப்புக்கு சுத்த வேண்டியது இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமை ஒன்னும் அவ்வளவு பெரிய நோய்லாம் இல்லை

தனிமை ஒன்னும் அவ்வளவு பெரிய நோய்லாம் இல்லை

தனியா இருக்கிறது உளவியல் ரீதியா எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா? இப்டின்னு சொல்லிட்டுத் திரியிறவங்களுக்குத் தான் சில கேள்விகள். நாங்க எப்போ தனியா இருந்தோம். எங்க கூட அப்பா, அம்மா இல்லையா, தங்கச்சி தம்பி இல்லையா. கஷ்டப்பட்டு பொறியியல் படிப்பை முடிச்சிட்டு வேலை இல்லாம சுத்திட்டு கடைசியா வேலைக் கிடைச்சி நிம்மதியா வாழாமா காதலில் சிக்கி அவஸ்தை பட விரும்பாதவங்கத் தான் முரட்டு சிங்கிள்.

Most Read :கள்ளக்காதலை தவிர்த்து கணவர்கள் தங்களது திருமண வாழ்க்கையை இப்படிதான் கெடுத்துக் கொள்கிறார்கள்

காதலிக்கிறதுல இருக்க சுகம் இருக்கே

காதலிக்கிறதுல இருக்க சுகம் இருக்கே

இந்த வார்த்தையை கல்யாணப் பேச்சை எடுத்ததுக்கு அப்பறம் யாரையாச்சும் சொல்ல சொல்லுங்க பாப்போம். ஆரம்பத்துல புதுசா பாக்குற எல்லாமே நல்லாத் தான் இருக்கும். புது அனுபவங்கள் இனிக்கத் தான் செய்யும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் உள்ள அழுகுறது காதலிக்கிறவனுக்குத் தான் தெரியும். இல்லை இன்னமும் காதலி கிடைக்களைன்னு வருத்தப்பட்டிங்கனா காதலர்களோட சோகக் கதையை முழுசாக் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க.

எப்படா கால் பண்ணுவாங்க

எப்படா கால் பண்ணுவாங்க

சூரியனை பாத்து மணி சொன்னதுலாம் அந்தக் காலம் காதலி போன் காலை வச்சு மணி சொல்றது தான் இந்தக் காலம். அலாரம் அடிச்ச மாதிரி ஷார்ப்பா காலைல போன் பண்ணி கடைசியா தூங்குற வரைக்கும் பேசுறதுல இருக்க காலந்தவறாமை அவங்களால மட்டும் தான் முடியும். ஆனால் ஒரு நாள் இது இல்லாமல் இருந்து பாருங்கள். வாழ்க்கையே வெறுத்துப் போயிடும். ஒரு வேளை நீங்கள் போன் அவுங்க எடுத்தா ஏன் கால் பண்ணலன்னு மட்டும் கேட்ராதீங்க. அப்பறம் உங்களை அப்ப அப்ப இந்த நிலைமைக்கு ஆளாக்கிடுவாங்க ஜாக்கிரதை.

வேசம் போடணும்

வேசம் போடணும்

காதலி வீட்டில் சம்மதம் வாங்குறதுக்கு என்ன பாடுலாம் படணும் தெரியுமா? அங்க எப்படியும் உங்க காதலுக்கு ஒரு வில்லன் இருப்பான். அவனுக்கு பிடிச்ச மாதிரி உங்களை மாத்திட்டு கொஞ்சம் நாள் வேசம் போடச் சொல்லுவாங்க. ஆனால் அதுவே உங்களுக்கு பழகிடும். சுயமரியாதை, தன் மதிப்பீடு அது எல்லாம் இருக்கணும் நினைச்சா காதலிக்காமல் இருக்கலாம்.

பாத்ரூம் போறதுக்குக் கூட ஒப்புதல் வாங்கணும்

பாத்ரூம் போறதுக்குக் கூட ஒப்புதல் வாங்கணும்

என்னதான் தெய்வீகக் காதலாக இருந்தாலும் இந்த விசயத்தில் தோற்றுத் தான் ஆகணும். எப்போதும் வேணானு சொல்ற அப்பா கூட பணம் குடுத்துப் போக சொல்லிருவாரு. ஆனால் உங்கள் காதலிகிட்ட அனுமதி வாங்குறது அவ்வளவு கஷ்டம். பக்கத்து தெருவுக்கு போறதில ஆரம்பிச்சு தண்ணியடிக்கிறது வரைக்கும் உங்க காதலிக்கிட்ட அனுமதி வாங்கணும். இது எல்லாம் நமக்கு தேவையா ?

காதல் சலித்துவிடும்

காதல் சலித்துவிடும்

அன்றாட வேலைகளைத் தவிர்த்து உங்கள் காதலியிடம் மொக்கை போடுவதைத் தவிர்த்து ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள். என்னத்த புதுசா பேசிடப் போறாங்க. பழைய பஞ்சாங்கத்தை தான் திருப்பி திருப்பி பேசப் போறாங்க. கொஞ்ச நாள்களில் சலிப்பை ஏற்படுத்தும். நீ சொல்லு சொல்லு உங்கள் காதலி சொல்ல. என்னத்தப் பேசுறதுன்னு தெரியாமல் கேட்டதையே திருப்பிக் கேட்க. அது கடைசியில் சண்டையில் போய் முடிகிறது இருக்கே அந்த வலியெல்லாம் சிங்கில்ஸ்க்கு தேவையா.

இன்ஸ்டாகிராம்ல ஒரு பொண்ணு உங்க போட்டோவுக்கு லைக் போட்டா

இன்ஸ்டாகிராம்ல ஒரு பொண்ணு உங்க போட்டோவுக்கு லைக் போட்டா

இன்ஸ்டாகிராமில் உங்கள் போஸ்ட்க்கு யாராவது ஒரு பொண்ணு லைக் போட்டா அன்னைக்கு உங்களுக்கு சிவராத்திரி தான். அந்த பொண்ணு யாருன்னுக் கூடத் தெரியாது. அதுக்குள்ள லைக் போட்ட பொண்ணை உங்க காதலி தன்னோட கம்பேர் பண்ணிப் பேசி. ஜெயமோகன் கூட இப்படியெல்லாம் கதை கட்டிருக்கமாட்டாங்க. ஆனா உங்க காதலியோட கதைக் கட்டல் இருக்கல்லவா. தப்பே பண்ணாமா கள்ளக் காதல் பட்டமெல்லாம் தேவையா

நண்பர்களோட இன்ப தருணங்கள்

நண்பர்களோட இன்ப தருணங்கள்

பிறந்ததில் இருந்து ஊர் திருவிழாவிற்கு ஒண்ணாப் போய் சந்தோசமா இருப்பீங்க. அந்த நாலு பேரில் உங்களுக்கு மட்டும் காதலிக்கிட்ட இருந்து அனுமதி கிடைக்காமல் இருந்து போகவில்லை. எவ்வளவோ முயற்சித்துப் பாத்திருப்பாங்க. உங்களுக்கு போகணும்னு தான் ஆசை ஆனால் போக முடியாதே நாங்களா உங்களை கால் கட்டுப் போட்டுக்க சொன்னோம்.

நீங்கள் மூன்றாம் நபர் கூட இல்லை போய் க்யூவில் நில்லுங்கள்

நீங்கள் மூன்றாம் நபர் கூட இல்லை போய் க்யூவில் நில்லுங்கள்

காதலுக்காக நண்பர்களோட சந்தோசமா சுத்துறது எல்லாம் நிப்பாட்டிட்டு நீ தான் உலகம்னு உங்க காதலிக்கு ஸ்டேட்டஸ் போடுவீங்கள். அதே மாதிரி சூழ்நிலை அவர்களுக்கு வந்து நீங்கள் வேணாம்னு சொல்லிப் பாருங்க. அம்மா, அப்பா, குடும்பம், அலுவலகம், நண்பர்கள் அதுக்கப்பறம் தான் நீங்கள் அப்டின்றது எவ்வளவு கஷ்டத்தை தரும். ஆனால் சிங்கிளா இருந்துப் பாருங்க உங்கள் நண்பருக்கு குடும்பத்துக்கு அப்பறம் நீங்களாத் தான் இருப்பீங்க.

கல்யாணம் நடக்குமா ? நடக்காதா

கல்யாணம் நடக்குமா ? நடக்காதா

இது தான் காதல் அத்தியாயத்தோட கடைசிப் பகுதி. இந்த இடத்தில் ஒருத்தன் சொல்லட்டும் சிங்கிளை விட கமிட்டெட் தான் சிறந்தது. நிச்சயம் யாரும் சொல்ல மாட்டான். முன்னெல்லாம் பெண்களுக்குத் தான் வரதட்சணை கேட்டாங்க. இப்ப ஆண்களுக்குத் தான் வரதட்சனை கேக்குறாங்க. சொந்த வீடு, கை நிறைய சம்பளம், கார், பைக், காதல் அத்தியாயத்தில் இதையெல்லாம் எடை போட்டுப் பாக்குறது இங்கத் தான். எனக்கு எந்த வேலைப் பாத்தாலும் ஓகே தான் ஆனால் எங்க அப்பாவுக்குத் தானு சொல்லுவாங்க... அவுங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு கேக்க உங்க மனசில் தோணிருச்சுன்னாலே நீங்கள் முடிவு பண்ணிட்டீங்க காதல் வேணாம்னு.

Most Read: உங்கள் கணவர் வீட்டிற்கு தினமும் தாமதமா வர்றதுக்கு இதுதான் காரணம் ? மனைவிகளே உஷார்

ஜெயில் வாழ்க்கையை தள்ளிப்போடுங்க

ஜெயில் வாழ்க்கையை தள்ளிப்போடுங்க

என்னைக்காச்சும் ஒரு நாள் நமக்கு கல்யாணம் அப்டிங்கிறது ஒன்னு நடக்கத் தான் போகுது. அதுவரைக்குமாச்சும் இளமையைக் கொஞ்சமாச்சும் அனுபவிச்சு வாழுங்களேன். சிங்கிளாக இருக்கிறேன்னு இனிமேலும் வருத்தப்படாதீங்க. நிம்மதியா இருக்கோம்னு சந்தோசப் படுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Being Single Is Better Than Dealing With Relationship Problems

As a matter of fact, if we look at things more closely, we will realize that being single is actually Better than dealing with these 10 relationship problems!
Story first published: Saturday, August 3, 2019, 17:39 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more