ஓர் ஆணிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த 8-ல், உங்களிடம் எத்தனை இருக்கிறது?

Posted By:
Subscribe to Boldsky

உடல்ரீதியாக, உடலமைப்பை வைத்து கண் பார்வையால் இவன் ஒரு ஆண் என யாரால் வேண்டுமானாலும் கூறிவிட முடியும். ஆனால், ஒருவன் ஆண்மையுடையவன், சிறந்த ஆண்மகன் என்பதை அந்த நபரின் குணாதிசயங்கள், பண்புகள் தான் தீர்மானிக்கின்றன என பெண்கள் கூறுகின்றனர்.

What Are The Qualities Women Expecting from a Good Men?

ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல், ஆறு இன்ச் மட்டும் ஒரு ஆணை சிறந்தவனாக்கிவிடாது. எப்படி ஆண்களால் பெண்களிடம் சில குணாதிசயங்கள் எதிர்பார்க்கப்படுகிறதோ. அதே மாதிரி தான் ஆண்களிடமும் பெண்கள் சில குணாதிசயங்களை எதிர்பார்க்கின்றனர்.

இந்த 8-ல் உங்களிடம் எத்தனை இருக்கிறது என நீங்களே கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூழ்நிலை கையாள்வது!

சூழ்நிலை கையாள்வது!

எந்த ஒரு சூழலாக இருந்தாலும் அதை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். எதிர்வினை சூழல்களை எப்படி நேர்வினை சூழலாக மாற்ற வேண்டும், கடுமையான சூழல்களில் எப்படி அனைவரும் ஆசுவாசப்படுத்த வேண்டும், சண்டைகளை பெரிதாக்காமல் நிறுத்துவது எப்படி என சரியாக செயற்படும் நபர் தான் சிறந்த ஆண்மகன்!

முன் நிற்கும் குணம்!

முன் நிற்கும் குணம்!

எந்த ஒரு வேலை அல்லது செயலையும் தானாக முன்வந்து செய்ய வேண்டும். மற்றவர் செய்யும் வரை அல்லது கூறும் வரியா காத்திருக்க கூடாது. இது ஒரு ஆண்மகனுடன் இருக்க வேண்டிய சிறந்த பண்பாகும். இது அவனை ஒரு தலைவனாக எடுத்துக் காட்டும். குடும்ப தலைவனாக போகும் ஆணிடம் கண்டிப்பாக இந்த பண்பு இருக்க வேண்டும்.

அப்டேட்டட்!

அப்டேட்டட்!

டிரென்ட்க்கு ஏற்றவாறு அப்டேட்டடாக இருக்க வேண்டும். வல்லுனராக இல்லாவிட்டாலும் எந்த ஒரு புதிய தொழில்நுட்பமாக இருந்தாலும் அதை பற்றிய அடிப்படை விஷயங்களாவது அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சிலர் ஃபேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் கூட அறிந்திருக்க மாட்டார்கள். எனவே, அப்டேட்டடாக இருக்க வேண்டியது தற்போதைய காலகட்டத்தில் மிகமிக அவசியம்.

குடும்ப உணர்வுகள்!

குடும்ப உணர்வுகள்!

குடும்ப உறவுகளுடன் சிறந்து விளங்க வேண்டும். பணத்தை சம்பாதிப்பதை காட்டிலும் உறவுகளை சம்பாதிக்க தெரிந்திருக்க வேண்டும். குடும்ப உறவுகளை வலிமையாக கட்டமைக்க தெரிந்திருக்க வேண்டும், குடும்ப பொறுப்புகளை சுமக்க தெரிந்திருக்க வேண்டும், மற்றவர் உணர்வுகளை படிக்க, அதை புரிந்து நடந்துக் கொள்ளும் நபராக இருக்க வேண்டும்.

திட்டம், கனவுகள்!

திட்டம், கனவுகள்!

எதிர்கால திட்டங்கள் வழிவகுத்து, அதற்காக உழைக்கும் நபராக இருக்க வேண்டும். தங்கள் கனவுகளை எதிர்நோக்கி பயணிக்கும் நபராக இருக்க வேண்டும். சாதிக்கும் பண்பு அதிகமாக இருக்க வேண்டும். சொந்த காலில், சுய சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தும் திறன் இருக்க வேண்டும்.

சமூக பங்கெடுப்பு!

சமூக பங்கெடுப்பு!

எப்போது பார்த்தலும் வீட்டுக்குள்ளே இருந்தபடி மொபைலை நோண்டுவது, ஃபேஸ்புக் பார்ப்பது என்று மட்டுமில்லாமல். சமூகத்திலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

குறைந்தபட்சம் தனது ஏரியாவில் அனைவரும் கொஞ்சமாவது அறிந்த நபர் என்ற அளவிற்காகவது பிரபலமாக இருக்க வேண்டும்.

ரொம்ப ஸ்டைல் வேண்டாம்!

ரொம்ப ஸ்டைல் வேண்டாம்!

அல்ட்ரா மாடர்ன் ஆண்மகன்களை பார்த்தல் ஒரு ஈர்ப்பு வருமே தவிர, அவன் தான் எனக்கானவன் என்ற எண்ணம் வருவதில்லை.

மேலும், சில சமயங்களில் அப்படி இருக்கும் ஆண்களை பார்த்தல் ஃப்ளர்ட் அல்லது ப்ளேபாயாக இருப்பானோ? என்ற அச்சம் இருக்கும். ஸ்டைலாக இருக்கலாம். ஆனால், அல்ட்ரா மாடர்ன் எல்லாம் வேண்டாம்.

அன்பு, பாதுகாப்பு!

அன்பு, பாதுகாப்பு!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... அன்பாக, அக்கறையாக, தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு நல்ல பாதுகாவலனாக இருக்க வேண்டும். இது போன்ற பண்புகள் தான் ஓர் ஆண்மகனை ஆண்மையுள்ளவனாய் எடுத்துக் காட்டும். மற்றவை எல்லாம் பிறகு தான் என பெண்கள் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Are The Qualities Women Expecting from a Good Men?

What Are The Qualities Women Expecting from a Good Men?
Story first published: Monday, July 31, 2017, 12:46 [IST]