தினமும் சித்திரவதை. ஆனால், அவனது விரல் கூட என்மீது பட்டதில்லை - உண்மை கதை!

Posted By:
Subscribe to Boldsky

முதல் முறை அவனை இணையத்தளம் மூலமாக சந்தித்த போது, என் வயது 13 அல்லது 14 இருக்கும். அவன் என்னைவிட மூன்று வயது மூத்தவன். எங்கள் வீட்டில் இருந்து ஒருசில மணிநேரத்தில் அடைந்துவிடும் தூரத்தில் பர்மிங்காம் அருகே அவன் வாழ்ந்து வந்தான்.

நாங்கள் இருவரும் ட்விட்டர் மூலமாக தான் நண்பர்கள் ஆனோம். ஒரு டிவி சீரியலின் ஃபேஸ்புக் பக்கம் மூலமாக எங்களுக்கு நெருக்கம் அதிகரித்தது. ஏழெட்டு மாதங்கள் நாங்கள் பேசி வந்தோம்.

ஒரு கட்டத்தில் விளையாட்டாக  நான் அவனை காதலன் என்றும், அவன் என்னை காதலி என்றும் அழைத்து வந்தோம். ஆனால், அது நாள் அவரை நாங்கள் இருவரும் நேரில் பார்த்துக் கொண்டதே இல்லை.

நாம் தனிமையை உணராமல் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதும் ஒருவிதமான நல்ல உணர்வு தான். ஆனால், இது அப்படியே செல்லவில்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருநாள்..

ஒருநாள்..

ஒரு நாள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது என்னால் இன்டர்நெட் பெற இயலவில்லை. ஆகையால், அவனுடன் பேசவோ, தொடர்பில் இருக்கவோ இயலாமல் போனது. நானும், இது பரவாயில்லை. நாங்கள் தான் பார்த்துக் கொள்ளவே இல்லையே. நான் இதை மிக எளிதாக எடுத்துக் கொண்டேன். ஆனால், அவன் மிகவும் மோசமாக மாறினான். மிகுந்த கோபம் அடைந்தான்.

என்னை பெட்டை நாய் என்றும், ஒழுக்கம் கெட்டவள் என்றும் ஏசினான். நான் அவனது வாழ்க்கையை முற்றிலுமாக அழித்துவிட்டேன் என கூறினான். நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுக்க ஒன்றாக இருக்க போகிறோம் என அவன் கருதியிருந்தான்.

மன வேதனை...

மன வேதனை...

நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். குழப்பான சூழலில் சிக்கி தவித்தேன். அவன் தான் எனது முதல் ஆண் தோழன். எனக்கு அதன் முன் எந்த அனுபவமும், உறவுகளும் இல்லை.

கடைசியாக நான் வீடு திரும்பிய பிறகு, கொஞ்ச நாட்களில் அமைதியானான். நாங்கள் மீண்டும் நண்பர்களானோம். சில மாதங்கள் கழித்து அவனை நேரில் சந்திக்க சௌகரியமாக உணர்ந்தேன். அதன் பிறகு எங்கள் வாழ்க்கை மிகவும் ஸ்மூத்தாக நகர்ந்தது.

வார இறுதிகளில்...

வார இறுதிகளில்...

அதன் பிறகு எங்கள் வாழ்க்கை மிகவும் சௌகரியமாக இருந்தது. ஒன்றல்லது, இரண்டு வார இறுதிகளில் ஒருமுறை நான் பர்மிங்காம் சென்று தங்கி வருவேன். அல்லது அவன் பிரிஸ்டல் வந்து என் வீட்டில் தங்கி செல்வான். அவன் எனது பெற்றோரை சந்தித்தான், அவர்களுடன் மிகவும் அன்பாக இருந்தான். என் பெற்றோரும் அவன் மீது அளவு கடந்து அன்பு கொண்டிருந்தார்கள்.

சில சந்திப்புகளுக்கு பிறகு...

சில சந்திப்புகளுக்கு பிறகு...

சில சந்திப்புகளுக்கு பிறகு அவன் கட்டுப்படுத்தும் நபராகவும், சூழ்ச்சி செய்யும் நபராகவும் மாற துவங்கினான். இது மெல்ல, மெல்ல நடந்தது. ஆரம்பக் காலகட்டத்தில், அவன் எனக்கு என்ன கொடுமை விளைவிக்கிறான் என்பதையே நான் உணராமல் இருந்தேன்.

நாங்கள் வெறுமென வாதிட்டிக் கொள்கிறோம் என்றே நான் அறிந்திருந்தேன். ஒவ்வொரு முறையும் நான் தான் அவனை தூண்டினேன் என கூற ஒரு காரணம் கொண்டிருந்தான்.

தவறான முத்தம்...

தவறான முத்தம்...

தவறுதலாக, வேறு ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் வேறு ஏதோ ஆணுக்கு முத்த ஸ்மைலி பதிவு செய்துவிட்டேன். இது தவறுதலாக நடந்த சம்பவம். இதை அவன் கண்டுகொண்டான். அப்போது தான் இதெல்லாம் அவனுக்கு பிடிக்காது என அறிந்தேன்.

ஒவ்வொரு முறையும், இது போல நீ செய்யாதே, அது போல நீ நடந்து கொள்ளாதே என கட்டளையிட துவங்கினான். நான் செய்ய மாட்டேன் என கூறினால் அவனது கோபம் குறைந்துவிடும்.

தனிமை...

தனிமை...

நான் எனது இதர நண்பர்களிடம் இருந்து தனிமையாக துவங்கினேன். அவர்களுடன் நேரம் செலவழிப்பது மிகவும் குறைந்து போனது. எனவே, அவன் மட்டுமே என் வாழ்வில் நிறைந்திருந்த நபராக மாறினான்.

அவன் மட்டுமே என்னை பற்றி முழுவதும் அறிந்தவனாக தன்னை நினைத்துக் கொண்டான். அவன் மட்டுமே எனக்கு நெருக்கமானவன் எனவும் அவனே கருத துவங்கினான். இது தொடர் கதையானது...

துன்புறுத்தல்...

துன்புறுத்தல்...

சில சமயம் அவனது வாழ்க்கை சந்தோஷமாக இல்லை என கூறுவான். சில சமயம் அதற்கு நான் தான் காரணம் என என்மீது பழிபோடுவான். சில சமயங்களில் என்னை விட்டு நகர்ந்து, உன்னை யாரும் இனி விரும்ப மாட்டார்கள். நீ மாறிவிட்டாய், நீ கெட்டவள் என்றெல்லாம் கூறுவான். நானும் கூட அதை நம்பியுள்ளேன்.

நான் இருந்தால் அவன் சந்தோஷமாக இருக்கிறான். மற்றபடி அவன் மிகவும் நல்லவன் தான் என நான் எண்ணினேன். அவனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது எனது வேலை என்றும் நான் நினைத்தேன்.

குத்துவேன்...

குத்துவேன்...

சில சமயங்களில் கத்துவான், என்னை கத்தி எடுத்து குத்த போகிறேன் என்றெல்லாம் கூறுவான். அதன் பிறகு தான் பேசி, பேசியே என்னை துன்புறுத்த ஆரம்பித்தான். கொடுமை என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல, பேச்சு ரீதியானதும் என்றும் அப்போது தான் அறிந்தேன். மிக சாதரணமாக துவங்கிய ஒரு உறவு, மிக மோசமாக உரு மாறியது.

ஒருமுறை, அவனை காண பர்மிங்காம் சென்றேன். மிக சீக்கிரம் சென்றதால் ஒரு காபி ஷாப்பில் அவனுக்காக காத்திருந்தேன். எனக்கு குறுஞ்செய்தி அனுப்ப துவங்கினான். அதில், "எனக்கு தெரியும், என்னை காண வரும் முன்பு, நீ வேறு ஒருவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்தாய்" என கூறினான். இல்லை என்பதை நிரூபிக்க அவனுக்கு எனது படத்தை எடுத்து அனுப்பினேன்.

அவனுக்கு என் மீதான கோபம் அதிகமானது. வந்தான், வந்ததும் நடுத்தெருவில் நின்று கத்த ஆரம்பித்தான். உன்னை கண்டால், கத்தி எடுத்து குத்த நினைத்தேன் என கத்தினான்.

அச்சம்...

அச்சம்...

எனக்கு அச்சம் அதிகரித்தது. கொஞ்ச நேரம் கழித்து காவல் நிலையத்திற்கு சென்றேன். ஆனால், என்னிடம் தகுந்த ஆதாரம் இல்லாமல் போனதால் ஏதும் செய்ய முடியாமல் போனது. அவனிடம் இருந்து பத்திரமாக இரு என கூறினார்கள்.

அதன் பிறகு அவனிடம் இருந்து விலகி, எங்கள் உறவை முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், ஆன்லைனில் என்னை தினமும் தொடர்புக் கொண்டு வார்த்தைகளால் கொடுமை செய்ய துவங்கினான். மீண்டும் போலீஸிடம் சென்றேன். என்னை சித்திரவதை செய்கிறான் என புகார் அளித்தேன்.

போலீஸ் அவனை கட்டுப்படுத்தியது. ஐந்தாண்டுகள் என்னுடம் பேசாமல், எந்த தொடர்பும் இன்றி இருந்தான். ஒருவேளை இந்த உறவு நீடித்திருந்தால்., உடல் ரீதியாகவும் அவன் என்னை துன்புறுத்த துவங்கியிருப்பான்.

வன்கொடுமை!

வன்கொடுமை!

உடல் ரீதியாக துன்புறுத்துதல் மட்டுமே வன்கொடுமை அல்ல. மன ரீதியாக துன்புறுத்துதலும் வன்கொடுமை தான். அந்த நீதிபதி அவனுக்கு தகுந்த தண்டனை அளித்தார். அதனால் தான் நான் இன்று நிம்மதியாக இருக்கிறேன்.

அவனை பிரிந்த இரண்டாண்டுகள் கழிந்த பிறகு நான் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பினேன். பல்கலைகழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். மன ரீதியான வன்கொடுமைகளுக்கு எதிராக நிறைய விழிப்புணர்வுகள் நடத்தினேன்.

பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என யார் மூலமாக மன ரீதியான வான் கொடுமைக்கு ஆளானாலும் அவர்களுக்கு அதை புரிய வைப்பேன். இதற்கென தேசிய அளவிலான பாதுகாப்பு அழைப்பு எண் உருவாக்கினோம்.

உடல் ரீதியாக துன்புறுத்தினால் தான் குற்றம் என யாரும், எதையும் தாங்கிக் கொள்ள தேவையில்லை. மன ரீதியாக வார்த்தைகளால் செய்வதும் வன்கொடுமை தான். அதற்கும் தண்டனை இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Story: Domestic Abuse Does Not Always have to Involve Violence!

Real Story: Domestic Abuse Does Not Always have to Involve Violence!
Subscribe Newsletter