காதலென்ற பெயரில், அவனை நம்பி 10 வருஷம் ஏமார்ந்தது தான் மிச்சம் - My Story #074!

Posted By:
Subscribe to Boldsky

இப்ப தான் இந்த வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசேஞ்சர், ஹைக்ன்னு பல சோஷியல் மீடியா மெசேஜ் ஆப் இருக்கு. ஆனா, பத்து வருஷத்துக்க முன்னாடி யாஹூ (Yahoo) மெசேஞ்சர் தான் பெரிய ஆன்லைன் மெசேஜ் டூல். ஃபிளோட்டிங் பார் மெசேஜிங் ஒரு ஸ்பெஷல் ஃபீல் கொடுத்துச்சு. பெருபாலும் நான் யார காண்டாக்ட் பண்ணனும்னாலும் யாஹூ மெசேஞ்சர் மூலமா தான் டெக்ஸ்ட் பண்ணுவேன்.

அப்போ நான் டெல்லி யூனிவர்சிட்டில இருந்து படிச்சு வெளிய வந்த ஃபிரெஷ் கிராஜுவேட். எனக்கு சின்ன வயசுல இருந்தே நியூஸ் வாசிக்கிற வேலைக்கு போகணும்னு தான் ஆசை.

மாஸ் கம்யூனிகேஷன் படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா, அம்மை போட்டதால அந்த எக்ஸாம் எழுத முடியல, என்னால அந்த கோர்ஸ்லயும் சேர முடியல.

இதனால ஒரு வருஷம் என் கேரியர்ல டிராப் ஆச்சு. எனக்கு அப்போ ஒரு சின்ன டெலிகாலர் கம்பெனியில வேலை கிடைச்சது. எனக்கு 21 வயசு. எல்லாரையும் போல அந்த வயசுல பசங்களோட பேசுறது ஒரு உற்சாகமா இருந்துச்சு. யாஹூல அடிக்கடி லாகின் பண்ணி நிறைய பேர் கூட பேசுவேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவன்...

அவன்...

தினமும் வேறவேற பேர் தான் பேசுவாங்க. ஆனா, அவன் ஒருத்தன் மட்டும் தான் தினமும் என் கூட பேசுவான். என் விண்டோஸ்ல யாஹூ மெசேஞ்சர் பாப்-அப் ஆனாலே, அது அவனோட மெசேஜா தான் இருக்கும்னு நான் நினைக்கிற அளவுக்கு அவன் என்கூட பேச ஆரம்பிச்சான்.

Image Credit: unsplash

சாஃப்ட்வேர் என்ஜினியர்!

சாஃப்ட்வேர் என்ஜினியர்!

அவன் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். நாங்க நிறையா நேரம் பேசியிருக்கோம். எங்க போட்டோஸ் எல்லாம் ஷேர் பண்ணியிருக்கோம். ஒரு கட்டத்துல போன் நம்பர் எக்ஸ்சேஞ்ச் பண்ணி நேராவும் பேச துவங்கினோம். அவன் அப்போ பார்ட்-டைம்ல எம்.பி.எ-வும் பண்ணிட்டு இருந்தான்.

Image Credit: unsplash

முதல் முறை!

முதல் முறை!

நாங்க ஒருநாள் மீட் பண்ண பிளான் பண்ணோம். மீட் பண்ண முதல் சந்திப்புல என்ன பேசலாம்னு என்னென்னமோ யோசிச்சுட்டு இருந்தப்போ. எங்க முதல் சந்திப்புல அவன் பேசுன முதல் வார்த்தை "என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது." அவன் என்கிட்டே எதிர்பாக்குறது வெறும் ஜஸ்ட் லைக் தட் ரிலேஷன்ஷிப் தான். இது கண்டிப்பா கல்யாணத்துல முடியாதுன்னு சொன்னான்.

எனக்கு ஏற்கனவே ஒரு எக்ஸ்-கேர்ள்பிரண்ட் இருந்தா, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இப்பவும் அவ என்கூட பேசிக்கிட்டு தான் இருக்கான்னும் சொன்னான்.

Image Credit: unsplash

நான் அப்போ யோசிக்கல

நான் அப்போ யோசிக்கல

அந்த வயசுல, அவன், அவனோட சாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைன்னு ஈர்ப்பு தான் எற்பட்டுச்சே தவிர, அவன் வெளிப்படையா சொன்ன வார்த்தை என் மண்டையில ஏறல. எப்படியும் பழக ஆரம்பிச்சா காதல் வந்திடும். அவன் சும்மா சொல்றான்னு நெனெச்சேன். ஆனா, அவன் சொன்னது உண்மை தான். என் வாழ்க்கையில சரிப்பண்ண முடியாத இழப்ப கொடுத்துட்டு போயிட்டான்.

Image Credit: unsplash

கொஞ்சம், கொஞ்சமா...

கொஞ்சம், கொஞ்சமா...

அவன பார்த்து ஒரு வருஷம் இருக்கும் கொஞ்சம், கொஞ்சமா தான் எங்க ரெண்டு பேருக்குள்ளையும் ஒரு ரிலேஷன்ஷிப் உருவாச்சு. அடிக்கடி சண்டை வரும், எங்க ரிலேஷன்ஷிப் ஆன், ஆப் ஆகிட்டே இருக்கும். காலம் போனதே தெரியாம நான் அவன்கூட பழக்கிட்டு இருந்தேன்.

Image Credit: unsplash

மாஸ் கம்யூனிகேஷன்ஸ்!

மாஸ் கம்யூனிகேஷன்ஸ்!

ஒருவழியா மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிக்க வைப்பு கிடைச்சது. என்னோட போஸ்ட்- கிராஜுவேட்ஷன் படிக்க ஆரம்பிச்சேன். அடிக்கடி கிளாஸ் கட்டடுச்சுட்டு ஃப்ரெண்ட்ஸ் இல்ல அவன் கூட வெளிய போயிடுவேன். அப்போ அது ஜாலியா இருந்துச்சு.

Image Credit: unsplash

அப்பா!

அப்பா!

படிச்சு முடிச்ச பின்ன, எனக்கு ஒரு நியூஸ் சேனல்ல வேலை கிடைச்சது. அப்பா என்ன ரொம்ப ஊக்கப்படுத்துனாரு. என் வர்க் லைப் ரொம்பவே ஜாலியா போச்சு. அப்பப்போ என்னோட சீனியர் கூட விவாதம் பண்ணுவேன். இது நியூஸ் சேனல்ல சாதாரணமா நடக்குற விஷயம் தான்.

ஆனா, அவனுக்கு இந்த வேலை பிடிக்கல. இந்த ஜாப்ல என்ன இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்கனும்ன்னு சொல்லி வேலைய விட சொன்னான். நான் பண்ண பெரிய தப்பு அவன் சொல்றத அட்வைஸா நெனச்சு என்னோட கனவு வேலையவிட்டது.

Image Credit: unsplash

70%

70%

என் கோர்ஸ்ல நான் 70% மார்க் ஸ்கோர் பண்ணி பாஸ் பண்ணேன். ஆனா, எனக்கு பிராக்டிகலா ஏதும் தெரியாது. காலேஜ் படிக்கும் போது ஏண்டா கட்டடுச்சுட்டு சுத்துனோம்ன்னு அந்த வேலையவிட்ட பிறகு தான் ஃபீல் பண்ணேன். ஏன்னா, என் வீட்டுல யார் கிட்டயும் சொல்லாமலே அந்த வேலைய நான் ரிசைன் பண்ணிட்டேன்.

அப்பறம் ஒரு காபி எடிட்டர் வேலை கிடைச்சது. என் ஆபீஸ் அவன் வேலை பார்த்துட்டு இருந்த இடத்துக்கு ரொம்பவே பக்கம் வேற. அதனால, அடிக்கடி நாங்க ரெண்டு பெரும் மீட் பண்ணிக்க அதிக வாய்ப்பு அமைஞ்சது.

Image Credit: unsplash

ஒரு நாள்...

ஒரு நாள்...

கண்டிப்பா இந்த ரிலேஷன்ஷிப் கல்யாணத்துல முடியாதுன்னு சொன்னவன், ஒரு நாள் என்கிட்டே வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான். ஷாக்கிங்கா இருந்துச்சு. என்ன சொல்றதுன்னே தெரியல. நானும் இதத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்.

ஆனா, எப்பவும் போல எங்களுக்குள்ள வந்த ஒரு சண்டை அந்த ஆப்ஷன குழி தோண்டி புதைச்சிடுத்து. அதுக்கப்பறம் அவன் தன்னோட மனச மாத்திக்கவே இல்ல.

Image Credit: unsplash

இரண்டே மாசம்!

இரண்டே மாசம்!

அடுத்த ரெண்டே மாசத்துல அவங்க வீட்டுல பார்த்த பொண்ணு கூட நிச்சயம்னு சொன்னான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் மனச மாத்திக்கல. ரொம்ப சீக்கிரமாவே அவனுக்கு அந்த பொண்ணோட கல்யாணமும் ஆயிடுச்சு.

அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் நாங்க பேசிக்கல. எங்க நான் அவனோட லைப்ல எதாச்சும் தொல்லை கொடுப்பேனோன்னு நெனைச்சு அவனோட மொபைல் நம்பர மாத்திட்டான்.

கொஞ்ச நாள் முன்ன, திரும்ப என் கூட பேசுனான்.

Image Credit: unsplash

அட்வைஸ்!

அட்வைஸ்!

அவனோட மனைவிக்கிட்டையும் என்னப்பத்தி சொல்லிருக்கான். அவங்களும் என்கிட்டே பேசுனாங்க. லைப்ல நீங்க அடுத்த நிலைமைக்கு போகணும். இன்னும் இதையே நெனச்சுட்டு இருக்காதீங்கன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாங்க. நான் அவனைவிட்டு ரொம்ப தூரம் வந்துட்டாலும். மனசும், அதுக்குள்ள இருக்கிற உணர்வும் அவனைவிட்டு வர மாட்டேங்குது.

Image Credit: unsplash

31 வயசு!

31 வயசு!

இப்போ எனக்கு 31 வயசு. என்னோட முதல் ஜாப் அப்போ, என் கூட வேலை பார்த்தவங்க எல்லாமே அடுத்த நிலைமைக்கு போயிட்டாங்க. நான் இன்னும் அதே காபி எடிட்டர். இது என்னோட ட்ரீம் ஜாபும் இல்லை. யூத் லைஃப் என்ஜாய் பண்றோம்ன்னு சொல்லி என்ன மாதிரி நிறையா பேரு வாழ்க்கையும், வேலையும் தொலைச்சிடுறாங்க. லவ் ஃபெயிலாச்சுனா வேற லவ் வரும். லைஃப் அப்படி இல்ல. நாம தொலைக்கிற ஒவ்வொரு வருஷமும்... ஏன் ஒரு நொடி கூட திரும்ப கிடைக்காது.

அவன நம்பி நான் என் வாழ்க்கையில பத்து வருஷம் இழந்தது தான் மிச்சம்.

Image Credit: unsplash

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: In The Name of Love, I Lost 10 Years of My Life!

My Story: In The Name of Love, I Lost 10 Years of My Life!