For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதுக்குள் வாழ்க்கையில் நீங்கள் தனியாக செய்து முடித்துவிட வேண்டிய 21 விஷயங்கள்!

|

கம்பியூட்டரை ஹேக் செய்ய தெரிந்த வித்துவானுக்கு கூட, அவருடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சின்ன, சின்ன விஷயங்களை செய்துக் கொள்ள தெரியாது. கடைக்கு சென்று காய்கறி வாங்கிவர கூறினால், பழையது, கெட்டுப் போனவற்றை வாங்கி வருவார்கள்.

மீட்டிங் என்றால் டை கட்ட தெரியாது, வெளியூர் செல்வதாக இருந்தால் பெட்டி படுக்கை எடுத்து வைக்க அம்மாவின் உதவி வேண்டும், தினமும் ஆபிஸ் செல்லும் முன்னர் மனைவி துணியை இஸ்திரி செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆண் மகன் என்ற கர்வம் மட்டும் இருக்கும்.

ஏன், ஆண்மையுடன் இருக்கும் ஆண்களை விட, ஆணி அடிக்க தெரியாத ஆண்களின் எண்ணிக்கை அதிகம். குறைந்தபட்சம் 30 வயதை தாண்டுவதற்குள் நீங்கள் இந்த 21 சிறு சிறு விஷயங்களையாவது தனியாக செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்நீச்சல்!

எதிர்நீச்சல்!

நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 2012, 2014 தொடர்ந்து அடுத்து 2050-களில் உலகமே இருக்காது என்கிறார்கள்.

எனவே, கடலில் இல்லை எனிலும், வீதிகளில் நீர் புகுந்துவிட்டால், அதிலிருந்து தப்பிக்க உங்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

வித்துவான்!

வித்துவான்!

பைக் அல்லது கார் டயர் ரிப்பேர் ஆகிவிட்டால், தவிக்காமல், நீங்களே கழற்றி மாற்றும் அளவுக்கு பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

டிக்கெட்!

டிக்கெட்!

பேருக்கு தான் நான்கு டிகிரி படித்திருப்பார்கள், ஆனால், ரயில் அல்லது விமான டிக்கெட் பதிவு செய்யக் கூட தெரியாது. இப்படி இல்லாமல், உங்களுக்கு அவசரம் என்றால் அந்த நிலையில், நீங்களாக டிக்கெட் பதிவு செய்ய கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

சமையல்!

சமையல்!

ஊர் புகழும் அளவிற்கு இல்லை என்றாலும், நமது வாயே காரித்துப்பாமல் இருக்கும் வண்ணம் ஆவது சமையல் சற்று சுவையாக அல்லது உணவாக இருக்கும் படி சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

வரி!

வரி!

ஒரு முறையாவது யாருடைய உதவியும் இல்லாமல், நீங்களாக உங்கள் வரியை ஃபில் செய்து முடிக்க வேண்டும்.

மேப்!

மேப்!

எந்த அச்சமும் இல்லாமல், கூகுள் இருக்கிறது என்ற தைரியத்தில், கூகிள் மேப் உதவியோடு, ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்.

டை!

டை!

சிலரை நீங்கள் பார்த்திருக்க கூடும், ஏதாவது மீட்டிங் என்றால் டையை எடுத்துக் கொண்டு அவரது நண்பரிடம் ஓடுவார்கள். இந்த ஓட்டம் இல்லாமல் சரியாக டை கட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பார்ட்டி!

பார்ட்டி!

பார்ட்டி கீட்டி சென்று வந்தால், போனோம் வந்தோம் என்றில்லாமல், புதிய நட்பு, அல்லது அனைவருடன் பேசி மகிழ்ந்து வர வேண்டும்.

அபாயம்!

அபாயம்!

ஏதேனும் ஒரு விஷயத்திலாவது அபாயத்தை எட்டிப்பார்த்து, தப்பித்து உங்கள் தன்னம்பிக்கை பறைசாற்றும் படி ஒரு செயலை செய்து திரும்ப வேண்டும்.

பேக்கப்!

பேக்கப்!

வெளியூர் செல்லும் போது அம்மாவின் உதவியின்றி உங்கள் உடைகளை, உபகரணங்களை நீங்களாக பேக்கில் சரியாக, ஒழுங்காக எடுத்து வைக்க வேண்டும்.

அலாரம்!

அலாரம்!

அலாரம் அடிக்கும் முன்னர் எல்லாம் வேண்டாம், அலாரம் அடித்தவுடன் எந்த சோம்பேறித்தனமும் இல்லாமல், உடனே படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் மனப்பக்குவம் உண்டாகியிருக்க வேண்டும்.

காயம்!

காயம்!

ஏழு கழுதை வயதானாலும், காயத்திற்கு மருந்து, கட்டு போட தெரியாமல் சுத்தும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்காமல், நீங்களாக காயத்திற்கு கட்டுப்போட கற்றுகொண்டிருக்க வேண்டும்.

சட்டை பட்டன்!

சட்டை பட்டன்!

சட்டை அல்லது பேன்ட் பட்டன் அறுந்துவிட்டால், அதை உடனே அம்மா அல்லது டைலரிடம் எடுத்து செல்லாமல், நீங்களாக ஊசி நூல் எடுத்து உட்கார்ந்து தைக்க வேண்டும்.

பல்பு!

பல்பு!

பெரிய எலக்டிரிக் மெக்கானிக்காக இல்லாவிட்டாலும், குண்டு பலவு ஃபியூஸ் போனாலாவது, அதை மாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

முடிவு!

முடிவு!

யாருடைய உதவியும் இல்லாமல், ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கலாக ஒரு சரியான முடிவை எடுக்க கற்றுகொண்டிருக்க வேண்டும். அதற்கு பாராட்டு வாங்கியிருந்தால், உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.

படுக்கை!

படுக்கை!

தூங்கி எழுந்தவுடன், படுக்கையை அலங்கோலமாக விட்டு செல்லாமல், ஐந்து நிமிடம் ஒதுக்கி, அதை மீண்டும் சரி செய்துவிட்டு கிளம்ப வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆணியே புடுங்க வேண்டாம்!

ஆணியே புடுங்க வேண்டாம்!

ஆண்மையுடன் இருக்கும் ஆண்களை விட, ஆணி கூட அடிக்க தெரியாத ஆண்களின் எண்ணிக்கை அதிகம்.

எனவே, இதுபோன்ற அவச்சொல்லுக்கு ஆளாகாமல், டமால், டுமீல் என ஆணி அடிக்க கற்றுகொண்டிருக்க வேண்டும்.

காய்கறி, பழங்கள்!

காய்கறி, பழங்கள்!

காய்கறி, பழங்கள் என உணவுப் பொருட்களை சரியாக பார்த்து வாங்க தெரிந்திருக்க வேண்டும். அழுகியது, கெட்டுப் போனவற்றை ஏமாந்து வாங்கி வரக் கூடாது.

இஸ்திரி!

இஸ்திரி!

நீங்கள் அணியும் உடைகளையாவது சரியாக, நீட்டாக இஸ்திரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வரவு, செலவு!

வரவு, செலவு!

மற்றவர்கள் ஏன்டா வீண் செலவு செய்யிற என அறிவுரை கூறாத வண்ணம், சரியாக வரவு, செலவை பின்பற்றும் வாடிக்கை, பழக்கம் இருக்க வேண்டும்.

அறிவு!

அறிவு!

எல்லாவற்றுக்கும் மேலாக காமன்சென்ஸ் எனப்படும், இது செய்தால் என்ன நடக்கும், இதை நாம் ஏன் செய்ய வேண்டும், இது தவறு இதை செய்ய கூடாது எனும் காமன்சென்ஸ் இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life வாழ்க்கை
English summary

21 Basic Life Skills You Ought To Know By The Time You Turn 30

21 Basic Life Skills You Ought To Know By The Time You Turn 30
Desktop Bottom Promotion