இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடம்பில் உள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் எடை சர்ர்ர்-ன்னு வேகமா குறையும்..

Posted By:

Weight loss Barley Vegetable Kanji Recipe In Tamil: உடல் பருமனால் சிரமப்படுகிறீர்களா? அதிகரித்த உடல் எடையைக் குறைக்க பாடுபடுகிறீர்களா? எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் ஒருசில எடை இழப்பு கஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்படி கஞ்சியை காலை உணவாக உட்கொள்ளும் போது, அது செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் பார்லியைக் கொண்டு கஞ்சி தயாரிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். மேலும் இந்த கஞ்சியுடன் காய்கறிகளையும் சேர்ப்பதால், சத்தானதும் கூட...

Weight loss Kanji Recipe How To Make a Barley Vegetable kanji

உங்களுக்கு பார்லி வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பார்லி - 100 கிராம்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - சிறிது
* ஸ்வீட் கார்ன் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
* சுடுநீர் தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பார்லியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து ஊற வைத்த பார்லியை மிக்சர் ஜாரில் போட்டு, ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பார்லியை சேர்த்து, பச்சை மிளகாயை கீறிப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கலந்தால், சுவையான பார்லி வெஜிடேபிள் கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 18, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion