Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
உடல் எடையை மடமட-ன்னு குறைக்க உதவும் கேரளா பச்சை பயறு கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Weight loss Kerala Payaru Kanji Recipe In Tamil: நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? இப்படி டயட்டில் இருக்கும் போது காலையில் சரியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால், உடல் ஆரோக்கியம் பாழாகி, உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டு, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு என்றால் அது கஞ்சி தான். கஞ்சியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு கஞ்சி தான் கேரளா பச்சை பயறு கஞ்சி. இந்த கஞ்சியில் புரோட்டீன் அதிகளவு நிறைந்துள்ளன. அதுவும் இந்த கஞ்சியை வெறுமனே சாப்பிடாமல் கேரளா ஸ்பெஷல் சம்மந்தியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இந்த கஞ்சியை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் வலிமையாகவும், உடம்பில் உள்ள கொழுப்புக்கள் குறைந்து, உடல் சிக்கென்று மாறும்.

உங்களுக்கு எடை இழப்புக்கு உதவும் கேரளா பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டை அரிசி - 1 கப்
* பச்சை பயறு - 1 கப்
* பூண்டு - 4-5 பல் (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 5 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1/2 கப்
சம்மந்திக்கு...
* சின்ன வெங்காயம் - 5
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் குக்கரில் மட்டை அரிசி மற்றும் பச்சை பயறை ஒன்றாக
எடுத்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், துருவிய கேரட்,
சீரகம், வெந்தயம், வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 கப் நீரை
ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8-9 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* அதற்கு அம்மியில் சின்ன வெங்காயம், சீரகம், வரமிளகாய், புளி,
மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை மற்றும் 1/4 கப் துருவிய தேங்காய்
சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு, உருண்டையாக உருட்டினால், சம்மந்தி
தயார்.
* பிறகு குக்கரில் உள்ள விசில் போதும் குக்கரைத் திறந்து, மத்து
கொண்டு அரிசியை மசித்துவிட வேண்டும்.
* அதன் பின் அதில் சுடுநீரை ஊற்றி, துருவிய தேங்காயைத் தூவி
பரிமாறினால், சுவையான கேரளா பயறு கஞ்சி தயார்.
* இந்த பயறு கஞ்சியை சம்மந்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக
இருக்கும்.



Click it and Unblock the Notifications











