Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
இந்த கஞ்சியை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடிங்க.. தொப்பையும் குறையும், சுகரும் கண்ட்ரோலா இருக்கும்.
Weight Loss Kanji Recipe In Tamil: நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியானால் தினசரி உடற்பயிற்சியுடன், பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான காட்டுயானம் அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்து வாருங்கள்.
இந்த கஞ்சி சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் தேங்குவதையும் தடுக்கும். ஒருமுறை இந்த கஞ்சியை செய்து குடித்தால், பின் அடிக்கடி செய்து குடிப்பீர்கள்.

உங்களுக்கு காட்டுயானம் அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காட்டுயானம் அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காட்டுயானம் அரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 4 டம்ளர் + தேவையான அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 8
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தயிர் - 3/4 கப்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் காட்டுயானம் அரிசியை நீரில் கழுவி, உலர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அரிசியில் உள்ள ஈரப்பதம் போனதும், அதை மிக்சர் ஜாரில் போட்டு
ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் அரைத்த காட்டுயானம் அரிசியைப் போட்டு, அத்துடன்
தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை நன்கு குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதில் கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, ஒரு கொத்து
கறிவேப்பிலை சேர்த்து, மூடி வைத்து, இரவு முழுவதும் நொதிக்க வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், பச்சை
மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தயிர், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை நொதிக்க வைத்த காட்டுயானம் அரிசி கஞ்சியுடன்
சேர்த்து கலந்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கலந்தால், சுவையான காட்டுயானம் அரிசி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











