Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இட்லி, தோசைக்கு வெங்காய சட்னியை ஒருடைம் இந்த ஸ்டைலில் செய்யுங்க.. வீட்டுல கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் அடிக்கடி இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பாரைத் தான் அதிகமாக சாப்பிடுவீர்களா? அதுவும் சட்னியை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி என்று தான் செய்வீர்களா?
இப்படி ஒரே மாதிரி செய்வதால், உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய கேட்கிறார்களா? அப்படியானால் வெங்காய சட்னியை செய்யுங்கள். அதுவும் வெங்காய சட்னியை உங்கள் ஸ்டைலில் செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த சட்னி குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 3
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* புளி - 1 சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வெல்லம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், 1
கைப்பிடி சின்ன வெங்காயம், நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 4 பல் பூண்டு,
சிறிய துண்டு புளி, 2 கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் வெல்லம், பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப
உப்பு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி ஊற்ற வேண்டும்.
* அடுத்து சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்
பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











