Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
வெந்தயக்கீரையை வாங்குனா.. இப்படி புளிக்குழம்பு செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Vendhaya Keerai Puli Kuzhambu Recipe In Tamil: வெயில் காலம் தொடங்கிவிட்டது. இப்படி வெயில் கொளுத்தும் போது உடல் சூடு பிரச்சனையை நிறைய பேர் சந்திக்கக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் இப்படியான நேரத்தில் கீரையை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. அப்படி உடல் சூட்டைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான கீரை தான் வெந்தயக்கீரை.
ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் இந்த கீரையை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை இந்த கீரையை சாப்பிட வைக்க வேண்டுமானால், வெந்தயக்கீரை புளிக்குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. மேலும் இந்த கீரை குழம்பு செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெந்தயக்கீரை புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை புளிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 25 மிலி + 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 10
* சீரகம் - 1 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2
* வெந்தயக்கீரை - 1 கட்டு
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம்,
பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கைப்பிடி சின்ன வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெந்தயக்கீரையை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி, தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, 3-4 நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரிய
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து
கலந்து, 1 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கலந்து, 2-3 நிமிடம் நன்கு
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை புளிக்குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications











