Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
செட்டிநாடு வெந்தய குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்..
Chettinad Vendhaya Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? இந்த செட்டிநாடு ரெசிபிக்களானது நல்ல சுவையாகவும், மணமாகவும் இருப்பதால், ஒவ்வொருவருமே விரும்பி சாப்பிடுவோம். இதற்கு அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான் முக்கிய காரணம்.
உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். வீட்டில் வெந்தயம் இருந்தால், அதைக் கொண்டு செட்டிநாடு வெந்தய குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பை ஒருமுறை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு வெந்தய குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வெந்தய குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொடிக்கு...
* வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
குழம்பிற்கு...
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 100 கிராம்
* சின்ன வெங்காயம் - 1/4 கிலோ (நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* அரைத்த வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன்
* வெல்லம் - சிறிது
தேங்காய் விழுதிற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை சேர்த்து
லேசாக நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு பொடித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் 100 கிராம்பு பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி சாற்றினை
ஊற்றி கிளறி, மூடி வைத்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், மிளகு, சோம்பு, பூண்டு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து
கிளறி, 4 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 ஸ்பூன் அரைத்த வெந்தய சீரக பொடியை சேர்த்து
கலந்து, சிறிது வெல்லத்தையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான செட்டிநாடு வெந்தய குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications