For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வித்தியாசமான வெண்டைக்காய் வறுவல் ரெசிபி

By Maha
|

வெண்டைக்காய் பலருக்கு விருப்பமான காய்கறிகளுள் ஒன்று. அத்தகைய வெண்டைக்காயை பலவாறு சமைக்கலாம். அதில் ஒன்று தான் வறுவல். அந்த வறுவல் செய்யும் போது கூட, அத்துடன் பல மசாலாக்களை சேர்த்து சமைக்கலாம்.

அந்த வகையில் இங்கு கடலை மாவு சேர்த்து செய்யும் ஒரு வெண்டைக்காய் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை முயற்சித்து எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

Tangy Bhindi With Besan Recipe

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை கழுவி, சுத்தமான துணியால் துடைத்து, 10 நிமிடம் தனியாக வைக்க வேண்டும்.

பின்னர் அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்ட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு வெண்டைக்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, மிதமான தீயில் 5-10 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் கடலை மாவு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறும் போது கடலை மாவின் வாசனையானது நீங்கி, வறுவலின் நிறம் பொன்னிறமாக மாறும் போது, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

இப்போது சூப்பரான வெண்டைக்காய் வறுவல் ரெடி! இதனை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Tangy Bhindi With Besan Recipe

Many bhindi/ladies finger recipes can be tried to fill the side dishes menu. Bhindi with besan recipe is simple and can be prepared quickly.
Story first published: Tuesday, January 28, 2014, 12:58 [IST]
Desktop Bottom Promotion