சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

Posted By:
Subscribe to Boldsky

மதியம் சாதத்திற்கு பொரியல் போன்று ஏதேனும் செய்ய நினைத்தால், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

இங்கு அந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Seppankilangu Roast Masala

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 10

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

சோம்பு - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு மற்றும் சேப்பங்கிழங்கை போட்டு, அடுப்பில் வைத்து 15-20 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை முற்றிலும் வடித்து, குளி வைத்து, அதில் உள்ள தோலை நீக்கி விட்டு, வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், அதில் வெட்டி வைத்துள்ள சேப்பங்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

அடுத்து, அதில் தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பின் பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

English summary

Seppankilangu Roast Masala

Do you know how to prepare Seppankilangu Roast Masala? Check out and give it a try...
Story first published: Monday, April 27, 2015, 13:16 [IST]
Subscribe Newsletter