ஹக்கா மஸ்ரூம்

Posted By:
Subscribe to Boldsky

எப்போதும் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் காளானைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்து சுவையுங்கள். இந்த டிஷ்ஷின் பெயர் ஹக்கா மஸ்ரூம்.

சரி, இப்போது அந்த ஹக்கா மஸ்ரூமை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Hakka Mushroom Recipe

தேவையான பொருட்கள்:

காளான் - 2 கப் (நறுக்கியது)
வெங்காயத்தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சோயா சாஸ் சேர்த்து கலந்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் சோள மாவு கலவையை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

காளான் சோள மாவுடன் சேர்ந்து நன்கு வெந்ததும், அதில் வெங்காயத் தாள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டால், ஹக்கா மஸ்ரூம் ரெடி!!!

English summary

Hakka Mushroom Recipe

Hakka Mushrooms is a low carbohydrate, delicious dish made of mushrooms flavoured with garlic and soya sauce. Learn how to make/prepare Hakka Mushrooms by following this easy recipe.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter