For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஞ்சி தேங்காய் சட்னி

By Maha
|

காலையில் பத்தே நிமிடத்தில் இட்லி அல்லது தோசைக்கு அருமையான சைடு டிஷ் செய்ய நினைத்தால், அதற்கு சட்னி தான் சரியான ஒன்று. அத்தகைய சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் அருமையான ஒன்று தான் இஞ்சி தேங்காய் சட்னி. இந்த சட்னியானது செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

அதுமட்டுமின்றி, உடல் எடையை குறைக்க நினைப்போர் இதனை எடுத்து வருவதும் நல்லது. சரி, இப்போது அந்த இஞ்சி தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Ginger Coconut Chutney

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்
இஞ்சி - 2 துண்டு (தோல் நீக்கி, கழுவியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதனை சட்னியில் ஊற்றி கலந்தால், இஞ்சி தேங்காய் சட்னி ரெடி!!!

English summary

Ginger Coconut Chutney

Have you not tried this yummy ginger coconut chutney? Prepare this yummy chutney for breakfast this morning.
Story first published: Thursday, September 4, 2014, 18:02 [IST]
Desktop Bottom Promotion