For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முருங்கைக்காய் தக்காளி கிரேவி: ஆந்திரா ரெசிபி

By Maha
|

மதிய வேளையில் சாதத்திற்கு நன்கு சுவையான சைடு டிஷ் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால், ஆந்திரா ரெசிபியான முருங்கைக்காயை தக்காளியுடன் சேர்த்து செய்யப்படும் கிரேவியை சமைத்து சாப்பிடுங்கள். இது சற்று புளிப்பாக இருப்பதுடன், மிகுந்த ருசியுடனும் இருக்கும்.

இங்கு அந்த ஆந்திரா ரெசிபியான முருங்கைக்காய் தக்காளி கிரேவியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து சுவைத்து பாருங்கள்.

Drumstick Tomato Gravy

தேவையான பொருட்கள்:

தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - 1 1/2 கப்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு முருங்கைக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, 5-7 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பின்னர் மூடியை திறந்து, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.

அடுத்து மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி கிளறி, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் தக்காளி கிரேவி ரெடி!!!

English summary

Drumstick Tomato Gravy

Drumstick tomato curry is a spicy and tangy andhra curry cooked with tomatoes and drumsticks. Learn how to make/prepare drumstick tomato curry.
Desktop Bottom Promotion