For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீன்ஸ் பருப்பு உசிலி

By Maha
|

பருப்பு உசிலி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய உணவுப்பொருள். முக்கியமாக இதனை பிராமணர்கள் தான் அதிகம் செய்து சாப்பிடுவார்கள். இது மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. இங்கு பீன்ஸ் பருப்பு உசிலியின் செய்முறை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த பீன்ஸ் பருப்பு உசிலி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Beans Paruppu Usili‏

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 20
கடலைப்பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பீன்ஸை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் நறுக்கி வைத்துள்ள பீன்ஸை சேர்த்து 7-8 நிமிடம் கொதிக்க விட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.

அதற்குள் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை சிறு உருண்டைகளாக்கி, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை குளிர வைத்து, அதனை உதிர்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு லேசாக வறுத்து, பின் அதில் பீன்ஸை சேர்த்து கிளறி இறக்கி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு தாளித்து, அத்துடன் ஊற்றினால், பீன்ஸ் பருப்பு உசிலி ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

English summary

Beans Paruppu Usili‏

Paruppu Usili is a traditional South Indian (Tamil) dish which is prepared with lentils. It is a very popular brahmin/iyengar recipe. Here is the beans paruppu usili recipe. Check out...
Story first published: Tuesday, May 20, 2014, 12:47 [IST]
Desktop Bottom Promotion