Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Udupi Hotel Style Vegetable Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் நைட் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் வெஜிடேபிள் குருமாவை செய்யுங்கள்.
இந்த குருமா சப்பாத்தி, பூரி, இடியாப்பத்துடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் வெஜிடேபிள் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1 கையளவு
* புதினா - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 2
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* கல்பாசி - 1 துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* துருவிய தேங்காய் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள கொத்தமல்லி,
புதினா, பச்சை மிளகாய், அன்னாசிப்பூ, பட்டை, ஏலக்காய், கிராம்பு,
அன்னாசிப்பூ, சீரகம், மிளகு, முந்திரி மற்றும் துருவிய தேங்காய்
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ் மற்றும்
உருளைக்கிழங்கை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்கு வதக்கி வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி, 1 கப்
நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில்
போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான உடுப்பி ஹோட்டல் ஸ்டைல்
வெஜிடேபிள் குருமா தயார்.



Click it and Unblock the Notifications











