Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தேங்காய் சட்னியை அரைக்கும் போது இந்த 1 பொருளை வதக்கி சேர்த்து அரைங்க.. சும்மா அல்டிமேட்டா இருக்கும்..
Thakkali Thengai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? இன்னும் சைடு டிஷ் எதுவும் முடிவு செய்யவில்லையா? அப்படியானால் தேங்காய் சட்னியை அரையுங்கள். அதுவும் வழக்கமாக அரைக்கும் தேங்காய் சட்னியை செய்யாமல், சற்று வித்தியாசமாக தக்காளியை வதக்கி சேர்த்து தேங்காய் சட்னியை அரைத்துப் பாருங்கள்.
இதனால் இந்த தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு ருசியாகவும் இருக்கும். இந்த தக்காளி தேங்காய் சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். முக்கியமாக இதை 10 நிமிடத்தில் செய்துவிடும் அளவில், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 5
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 3 பல் பூண்டு சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள்
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீர் ஊற்றாமல்
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டுமானால் சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றிக்
கொள்ளலாம்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











