Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
2 தக்காளியும், கொஞ்சம் பொட்டுக்கடலையும் வெச்சு.. இப்படி சட்னி செய்யுங்க... இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்...
Tomato Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை செய்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும். நீங்கள் இன்னும் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? அப்படியானால் தக்காளி மற்றும் பொட்டுக்கடலை கொண்டு அருமையான சட்னியை செய்யுங்கள்.
இந்த தக்காளி பொட்டுக்கடலை சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், இந்த சட்னியை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட வீட்டில் உள்ளோர் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பொட்டுக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 6
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு, சிறு துண்டு
புளியை சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
பொட்டுக்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











