தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..

Posted By:

Thattu Kadai Pudina Thakkali Chutney Recipe In Tamil: இதுவரை இட்லி, தோசைக்கு எத்தனையோ ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் இந்த தட்டுக்கடை தக்காளி சட்னியை செய்துள்ளீர்களா? இந்த சட்னியின் ஸ்பெஷலே அதில் புதினாவை சேர்த்து செய்வது தான்.

அதுமட்டுமின்றி, அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இந்த சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் இந்த சட்னி ருசியாக இருக்கும்.

Thattu Kadai Mint Tomato Chutney How To Make Pudina Thakkali Chutney

உங்களுக்கு தட்டுக்கடை புதினா தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்:

* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* கறிவேப்பிலை - 2 கொத்து
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 துண்டு
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2
* உளுத்தம் பருப்பு - 1/2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 கைப்பிடி புதினா, 1/2 கைப்பிடி கொத்தமல்லி மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஜாரில் நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 3, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion