இந்த 4 ராசிக்காரர்களுக்கு 30 வயதிற்கு மேல் சனி பகவானின் ஆசியால் வெற்றியும், பணமும் குவியும்..

Shani Dev Favourite Zodiac Signs In Tamil: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இப்படி பாரபட்சம் பாராமல் ஒருவருக்கு பலன்களைத் தருவதால், இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் உச்ச ஸ்தானத்தில் இருந்தால், அவர் கடின உழைப்பால் செல்வம் சேர்த்து, சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெருமையும் பெறுவார்.

முக்கியமாக சனி பகவான் ஒருவருக்கு உண்மையான வாழ்க்கைப் புரிய வைப்பார். இதற்காக பல சோதனைகளைக் கொடுத்து, வாழ்க்கையில் நல்ல வழியில் நடக்க வைப்பார். சொல்லப்போனால் சனி பகவானுக்கு ஆண்டியையும் அரசனாக்கும் ஆற்றல் உண்டு.

People Of These Zodiac Signs Will See Success After The Age Of 30 By Lord Shani s Blessings

இப்படிப்பட்ட சனி பகவானுடன் ஒத்துப்போகும் குணங்களுடன் சில ராசிக்காரர்கள் இருப்பதால், அந்த ராசிக்காரர்கள் மீது தனி பிரியம் உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு ஆரம்பத்தில் சனி பகவான் பல சோதனைகளைக் கொடுத்தாலும், 30 வயதிற்கு மேல் நல்ல வெற்றியையும், பணத்தையும் பெறச் செய்வார். இப்போது சனி பகவானுக்கு பிடித்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசிக்கு சனி பகவான் மிகச்சிறந்த யோகக்காரகன் ஆவார். மேலும் சனியும், சுக்கிரனும் நட்பு கிரகங்களாவர். இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் பொறுமைசாலிகள் மற்றும் விடாமுயற்சியுடன் ஒன்றை செய்து முடிக்கக்கூடியவர். இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தாலும், அதை தாங்கி பக்குவமாக கையாளக்கூடியவர்கள். எனவே இந்த ராசியைச் சேர்ந்தவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் குறிப்பிட்ட வயதிற்கு பின், இந்த ராசிக்காரர்கள் சோதனையையும் சாதனையாக மாற்றும் ஆற்றலை சனி பகவான் வழங்குவார்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்கள் பிறவியிலேயே சனி பகவானின் ஆசியுடன் தான் உலகில் பிறக்கிறார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், ஒழுக்கமானவர்கள் மற்றும் நிதானமானவர்கள். இலக்கை அடைய உறுதியான மனதுடன் மெதுவாக முன்னேறும் குணத்தைக் கொண்டதால், இந்த ராசிக்காரர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்கும். இதனால் தான் இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனி காலத்திலும் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்காமல் உள்ளனர்.

துலாம்

துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன். மேலும் சனி பகவான் இந்த துலாம் ராசியில் தான் உச்சமடைவார். அதாவது இந்த ராசியில் சனி பகவான் தனது முழு பலத்தையும் பெற்று, நற்பலன்களைப் பொழிவார். இப்படிப்பட்ட துலாம் ராசியின் அதிபதியும், சனி பகவானும் நட்பு கிரகங்களாவர். இந்த துலாம் ராசியின் அடையானம் தராசு. இது நீதியைக் குறிக்கிறது. எனவே இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நியாயமாக நடந்துகொள்வார்கள். இப்படி நியாயமாகவும், கண்ணியமாகவும் நடப்பவர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்கும். ஆகவே இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நற்பலன்களை வாரிவாரி வழங்குவார்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவானாவார். சொல்லப்போனால் இது தான் சனி பகவானின் மூலதிரிகோண ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் மனிதாபிமானம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உதவும் நற்குணங்களைக் கொண்டவர்கள். சமூக அக்கறை கொண்டவர்கள், எதையும் தீர யோசித்த பின்னரே முடிவெடுப்பார்கள். இப்படி சனி பகவானின் அனைத்து குணங்களையும் இந்த ராசிக்காரர்கள் கொண்டிருப்பதால், இந்த ராசிக்காரர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்கும். ஆகவே இந்த ராசிக்காரர்கள் பிற்காலத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, March 2, 2026, 18:24 [IST]
Desktop Bottom Promotion