Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 40 வயசுக்கு மேல் பணக்காரராவாங்களாம்.. உங்க பிறந்த மாதம் இதுல இருக்கா?
Luckiest Birth Month: ஒருவருக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. சிலருக்கு அந்த வெற்றி இளம் வயதிலேயே கிடைத்துவிடும். இன்னும் சிலர் குறிப்பிட்ட வயதிற்கு பின் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஜோதிடம் பெரும்பாலும் இந்த தாமதமான செழிப்பை முதிர்ச்சி, பொறுமை மற்றும் கர்ம நேரத்துடன் தொடர்புபடுத்துகிறது.
அதில் சிலர் தங்களின் 40 வயதிற்கு பின் வாழ்க்கையில் உச்சத்தை அடைவதாக கூறுகிறது. சுவாரஸ்யமாக, ஒருவரது பிறந்த மாதமானது அந்நபரின் நிதி வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆளுமைப் பண்புகளான ஒழுக்கம், மீள்தன்மை, மூலோபாய சிந்தனை மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.

பொறுப்புகள் அதிகரித்து, வயதுக்கு ஏற்ப ஞானம் ஆழமடையும் போது, ஒருவர் பெரும்பாலும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதையும், சிறந்த வாய்ப்புகளை ஈர்ப்பதையும், அதிர்ஷ்ட கதவு திறப்பதையும் காண்கிறார்கள். இப்போது எந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் 40 வயதிற்கு மேல் செல்வந்தராகும் அதிர்ஷ்டத்தைக் கொண்டவர்கள் என்பதைக் காண்போம்.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் சுக்கிரனின் அருளைப் பெற்றவர்கள். இதனால் இவர்களிடம் செல்வம் மற்றும் சொத்துக்களை சேர்ப்பது, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வது போன்ற குணங்கள் அதிகம் இருக்கும். இவர்களுக்கு பணத்தின் மதிப்பு நன்கு தெரியும். இதனால் வீண் செலவு அதிகம் செய்யமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஃபேஷன், வங்கி, கலை போன்ற துறைகள் ஏற்றதாக இருக்கும். இந்த துறைகளில் இருந்தாவ், சிறந்து செயல்பட்டு, படிப்படியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டு, சமூகத்தில் ஒரு நல்ல நிலையை அடைவார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சனி மற்றும் குருவின் பரிபூர்ண அருளைப் பெற்றவர்கள். இதனால் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவாலும், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள் மற்றும் தங்களின் நிதி நிலையை வலுப்படுத்துவார்கள். மேலும் இவர்கள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள். ஏமாற்றும் குணம் இவர்களிடம் இருக்காது. இப்படியான குணங்கள் அனைத்தும் இவர்கள் மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை உண்டாக்கும். இந்த மாதங்களில் பிறந்தவர்கள் ஐடி துறை, வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் போன்றவற்றில் இருந்தால், நல்ல நிலையை அடைவார்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் அருளைப் பெற்றவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு தைரியமும், துணிச்சல், வேகமாக முடிவெடுக்கும் திறன், தலைமைத்துவ பண்புகள் போன்றவை அதிகம் இருக்கும். முக்கியமாக இவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருந்தால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதுவும் 40 வயதிற்கு மேல் இவர்களுக்கு நிதி பிரச்சனையே இருக்காது.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் சூரியனின் ஆசியைப் பெற்றவர்கள். இதனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களிடம் மரியாதை, அதிகாரம், தலைமைத்துவ பண்புகள் இயற்கையாகவே இருக்கும். மேலும் இவர்கள் எப்போதும் பெரிய அளவில் தான் யோசிப்பார்கள். இந்த மாதங்களில் பிறந்தவர்கள் ஆரம்பத்திலேயே அரசியல், சினிமா, மீடியா போன்ற துறைகளில் வேலை செய்தால், படிப்படியாக எளிதில் முன்னேறி, வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் ஒரு நல்ல நிலையை அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
