For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் போளி: உகாதி ரெசிபி

By Babu
|

உகாதி ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு பிரபலமான ரெசிபி தான் போளி. இத்தகைய போளியில் தேங்காய் போளியின் செய்முறை தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஈஸியான ரெசிபி என்பதால், இந்த வருடம் தவறாமல் செய்த சாப்பிடுங்கள்.

சரி, இப்போது அந்த தேங்காய் போளியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Coconut Puran Poli: Ugadi Sweet Recipe

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வெல்லம் - 1 1/2 கப்
தேங்காய் - 2 கப் (துருவியது)
ஏலக்காய் - 2-3 (பொடி செய்தது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, ரவை, மஞ்சள் தூள், பொடி செய்த ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு, நன்கு கரைய வைக்க வேண்டும்.

வெல்லமானது நன்கு கரைந்ததும், அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பாகு சற்று கெட்டியாக வரும் போது அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் விரலால் ஓட்டை போட்டு, அதன் நடுவே வெல்ல கலவையை வைத்து, முனைகளை மூடி மீண்டும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

கல்லானது சூடாவதற்குள், ஒரு பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதில் ஒரு உருண்டையை வைத்து, தட்டையாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், தேங்காய் போளி ரெடி!!!

English summary

Coconut Puran Poli: Ugadi Sweet Recipe

Puran poli is a traditional Ugadi sweet recipe. Try the coconut puran poli. It is a tasty Indian sweet dish.
Desktop Bottom Promotion