நெஞ்சு சளியைக் கரைக்கும் சுக்கு பால்.. எப்படி செய்றது-ன்னு தெரியுமா?

Posted By:

Sukku Milk Recipe In Tamil: பனிப்பொழிவால் கடுமையான சளியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? நெஞ்சு சளி அதிகமாக இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் நெஞ்சு சளிக்காக குடித்து வந்த ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பானத்தை செய்து குடியுங்கள். அது தான் சுக்கு பால்.

இந்த சுக்கு பால் சளி, இருமலில் இருந்துவிடுவிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் இந்த சுக்கு பாலை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. அளவாகவே குடிக்க வேண்டும். குறிப்பால் சுக்கு பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால், 6 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் கொடுக்க வேண்டும்.

Sukku Paal How To Make a Sukku Milk Recipe

உங்களுக்கு சுக்கு பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுக்கு பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
* உடைச்ச கருப்பு உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சுக்கு - 1 இன்ச்
* பொடித்த வெல்லம்/கருப்பட்டி/பனங்கற்கண்டு - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* தேங்காய் பால் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சரிசி, கருப்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதேப் போல் சுக்கையும் தோல் நீக்கி, தட்டி, நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், ஊற வைத்த சுக்குவை நீருடன் அப்படியே ஊற்றி, அத்துடன் ஊற வைத்த அரிசி, பருப்பு மற்றும் வெந்தயத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்ததை ஊற்றி, அத்துடன் சிறிது நீரை ஊற்றி, ஸ்பூன் கொண்டு கிளறி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அத்துடன் நீரை ஊற்றி வெல்லத்தைக் கரைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வடிகட்டி வைத்துள்ள பாலை ஊற்றி, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி தொடர்ந்து கைவிடாமல் 15 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, சிறிது சுடுநீரையும் ஊற்றி குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி பரிமாறினால், சுவையான சுக்கு பால் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, December 20, 2024, 18:00 [IST]
Desktop Bottom Promotion