Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
இலங்கை உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி... இந்த மாதிரி செய்யுங்க... சாம்பார் சாதத்தோட சாப்பிட சூப்பரா இருக்கும்...
Sri Lankan Potato Fry Recipe in Tamil: சில காய்கறிகள் அனைவருக்குமே மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதில் முக்கியமானது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை பொரியல் செய்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு உருளைக்கிழங்கு அனைவரின் சமையலறையையும் ஆக்கிரமித்துள்ளது. சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் பல வழிகளில் சமைக்கலாம். அப்படி ஒரு தனித்துவமான உருளைக்கிழங்கு ரெசிபிதான் ஸ்ரீலங்கன் சில்லி உருளைக்கிழங்கு.
ஸ்ரீலங்கன் சில்லி உருளைக்கிழங்குனா ரொம்ப கஷ்டமான ரெசிபிலாம் இல்ல. நம்ம வீட்ல எல்லோருக்கும் பிடிக்கிற உருளைக்கிழங்கு வறுவல் தான். ஆனா அதை ஸ்ரீலங்கா மக்கள் சேர்க்கிற தனித்துவமான மசாலாவை சேர்த்து செஞ்சா அதுதான் ஸ்ரீலங்கன் சில்லி போட்டேடோ. இந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் சுவையும் வித்தியாசமானதாக இருக்கும்.

உங்களுக்கு ஸ்ரீலங்கன் உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்ரீலங்கன் உருளைக்கிழங்கு வறுவலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 8 பல் பூண்டு
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 2 டேபிள்ஸ்பூன் சில்லி ப்ளெக்ஸ்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- இந்த அட்டகாசமான உருளைக்கிழங்கு வறுவலை செய்வதற்கு, உருளைக்கிழங்கைக் கழுவி, பிரஷர் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். தோலை உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும்.
- பூண்டுப் பற்களை ஒரு கரண்டியை வைத்து இடித்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகை சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் இலவங்கப்பட்டை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.
- இடித்த பூண்டைச் சேர்த்து, அதன் வாசனை எண்ணெயில் நன்றாக இறங்கும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சில்லி பிளேக்ஸை சேர்த்து நன்கு கிளறவும். மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
- உருளைக்கிழங்கு கலவையை மசாலாக்களுடன் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும், பாத்திரத்தின் அடியில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும்.
- மசாலா உருளைக்கிழங்கு மீது நன்றாக ஒட்டும் படி நன்றாக கிளறி விடவும், அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்ததும், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஸ்ரீலங்கன் உருளைக்கிழங்கு வறுவல் ரெடி. இதை சூடான சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











