இட்லிக்கு ஏற்ற... காரசாரமான.. ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்வது எப்படி?

Posted By:

Hyderabadi Tomato Chutney Recipe: காலை வேளையில் உங்கள் வீட்டில் இட்லி, அல்லது தோசை செய்யப் போகிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ,இட்லி, தோசைகு சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி தக்காளி சட்னி செய்வீர்களா?

அடுத்த முறை தக்காளி சட்னியை செய்வதாக இருந்தால், ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும் சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Spicy Hyderabadi Tomato Chutney Recipe

உங்களுக்கு ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்டினியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 1 3/4 கப் (நறுக்கியது)
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* மசித்த பூண்டு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளி, இஞ்சி, மசித்த பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி கலவையை சேர்த்து நன்கு கிளறி, 10-12 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், ஒரு மத்து கொண்டு மசித்தால், சுவையான ஹைதரபாத் ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

Image Courtesy: butteroverbae

[ of 5 - Users]
Story first published: Monday, December 4, 2023, 7:52 [IST]
Desktop Bottom Promotion