1 கப் சம்பா ரவை இருந்தா.. காலையில் ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்...

Posted By:

Samba Rava Adai Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? ஆனால் உங்கள் வீட்டில் தோசைக்கு மாவு தீர்ந்துவிட்டதா? உங்கள் வீட்டில் சம்பா ரவை உள்ளதா? பொதுவாக சம்பா ரவையை உப்புமா போன்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அப்படி உப்புமா செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள். ஆனால் அந்த சம்பா ரவைக் கொண்டு அடை தோசை சுட்டால், நிச்சயம் அனைவரும் சாப்பிடுவார்கள்.

அதுவும் இந்த சம்பா ரவா அடைக்கு தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக வைத்துக் கொண்டால், கணக்கில்லாமல் அடை தோசையை வீட்டில் உள்ளோர் சாப்பிடுவார்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த சம்பா ரவை ருசியாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த அடையை முயற்சித்தால், பின் அடிக்கடி இந்த அடை தோசையை சுட்டு சாப்பிடுவீர்கள்.

Samba Rava Adai How To Make a Samba Rava Adai Recipe

உங்களுக்கு சம்பா ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சம்பா ரவா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சம்பா ரவை - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 3
* பூண்டு - 1 பல்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் சம்பா ரவையை எடுத்து, அதில் 1 3/4 கப் நீரை ஊற்றி, அத்துடன் வரமிளகாயை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஊற வைத்த ரவையை மிக்சர் ஜாரில் நீருடன் அப்படியே சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 பல் பூண்டு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதை அரைத்த மாவில் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய 1/2 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி தோசையாக சுற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான சம்பா ரவா அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 1, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion