Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சேலம் குகை தட்டைப்பயறு கூட்டு குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Salem Gugai Thattai Payuru Kootu Kulambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதியம் சாதத்துக்கு தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சேலம் குகை தட்டைப்பயறு கூட்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இந்த கூட்டு குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, அற்புதமாக இருக்கும். மேலும் இந்த குழம்பை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், வாரம் ஒருமுறை இந்த குழம்பை செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு சேலம் குகை தட்டை பயறு கூட்டு குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலம் குகை தட்டை பயறு கூட்டு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
கூட்டு பொடிக்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* அரிசி - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 5
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
வேக வைப்பதற்கு...
* தட்டைப்பயறு - 150 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் பூசணி - 150 கிராம் (பெரிய துண்டுகளாக்கியது)
* கத்திரிக்காய் - 4 (பெரிய துண்டுகளாக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கூட்டு பொடி - 2 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2
* உளுத்தம் பருப்பு - 1/2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில், மல்லி, உளுத்தம்
பருப்பு, மிளகு, சீரகம், அரிசி, சோம்பு, பட்டை, கிராம்பு, வெந்தயம்,
கடலைப் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் தட்டைப்பயறை போட்டு, நீரில் 2 முறை கழுவி, பின்
பயறு மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். அதன் பின் அதில்
நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மஞ்சள் பூசணி சேர்த்து
கலந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு,
கொத்தமல்லியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் புளிச்சாறு மற்றும் 2
ஸ்பூன் கூட்டு பொடியை சேர்த்து கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து, 5
நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதை இறக்கி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பை சேர்த்து கிளறி, பின் வெல்லத்தையும் சேர்த்து
ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான சேலம் குகை தட்டைப்பயறு கூட்டு
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











