புத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி? நிமிடத்தில் செய்திடலாம்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

உங்கள் புத்தாண்டு பண்டிகைக்கு இது ஒரு சிறப்பான பொருத்தமான ரெசிபி ஆகும். இந்த பியூட்டிபுல்லான கலர் கேக் கண்டிப்பாக உங்கள் புத்தாண்டு மார்னிங்கை அழகாக மாற்றிவிடும். அப்படியே இந்த ரெட் வெல்வெட் கேக்கை ஒவ்வொருவருக்கும் பரிமாறும் போது கண்டிப்பாக எல்லாருடைய பாராட்டையும் பெறுவீர்கள்.

பண்டிகைகளுக்கு பொருத்தமான இந்த கேக்கை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும். இதற்கு கோக்கோ பவுடர், சர்க்கரை, பட்டர் மில்க் மற்றும் கலரிங் பொடி இவைகள் இருந்தால் போதும்.

Red Velvet Pancake

இந்த ரெட் வெல்வெட் கேக்கை தட்டில் பார்த்தவுடனயே உங்கள் நாக்கை சொட்டை போடச் செய்து விடும். உங்கள் புத்தாண்டு காலை வேளையை கலர்புல்லாக மாற்ற இது ஒரு சிறந்த ரெசிபி ஆகும். இந்த அழகான ரெசிபியை நமது செஃப் அனில் தகியா மற்றும் பிரிஸ்டோல் குருகிராம் நம்மளுக்காக செய்து காட்டியதை இங்கே காணலாம்.

ரெட் வெல்வெட் பேன் கேக்
Prep Time
15 Mins
Cook Time
15M
Total Time
30 Mins

Recipe By: செஃப் அனில் தகியா

Recipe Type: டிசர்ட்

Serves: 10

Ingredients
 • மைதா மாவு - 10 கப்

  சர்க்கரை - 1/4 கப்

  கோக்கோ பவுடர் - 2/3 கப்

  பேக்கிங் சோடா - 6 டேபிள் ஸ்பூன்

  பேக்கிங் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்

  உப்பு - 5 டேபிள் ஸ்பூன்

  பட்டர் மில்க் - 2 கப்

  முட்டை - 2

  சிவப்பு கலரிங் பொடி-2 டேபிள் ஸ்பூன்

  பட்டர் மற்றும் மாப்பிள் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • ஒரு பெரிய பெளலில் மைதா மாவு மற்றும் சர்க்கரையை சேர்க்க வேண்டும்

  நன்றாக இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்

  அதனுடன் கோக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும்

  நன்றாக கலக்கவும்

  உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்

  எல்லா பொருட்களையும் நன்றாக கிளறவும்

  ஒரு 5 சிப் லாக் கவர் அல்லது 5 காற்று புகாத டப்பாக்களை எடுத்து கொள்ளவும்

  ஒவ்வொரு கவரிலும் அல்லது டப்பாக்களில் இரண்டு கப் அளவிற்கு மாவு கலவையை வைக்கவும்

  இப்பொழுது இவைகளை பிரிட்ஜில் வைத்து விடவும்.

  பேன் கேக் செய்முறை

  ஒரு பெரிய பெளலை எடுத்து கொள்ளவும்

  கலந்த கலவையை அதில் சேர்க்கவும்

  பிறகு ஒரு சிறிய பெளலை எடுத்து கொள்ளவும்

  அதில் பட்டர் மில்க் மற்றும் முட்டையை சேர்க்கவும்.

  இரண்டையும் ஒரு கலக்கியை கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்

  அதனுடன் கலரிங் பொடியை சேர்க்கவும்

  இப்பொழுது எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்

  பிரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட கலவையை இதனுடன் சேர்க்கவும்

  பிறகு நன்றாக ஈரப்பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்

  பிறகு ஒரு தவாவை எடுத்து சூடுபடுத்தவும்

  அதில் எண்ணெய் அல்லது பட்டரை தடவ வேண்டும்

  இப்பொழுது கலந்து வைத்துள்ள பேட்டரை 1/4 கப் அளவிற்கு அதில் ஊற்றவும்

  மேலே நுரைகள் வந்ததும் அதை திருப்பி போடவும்

  மறு பக்கம் பொன்னிறமாக வரும் வரை சூடுபடுத்தவும்

  நன்றாக வெந்ததும் பேன் கேக்கை ஒரு தட்டில் வைக்கவும்

  இப்பொழுது கேக்கை வெண்ணெய் மற்றும் சிரப் மேலே ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

  சூடாக பரிமாறவும்

Instructions
 • ரெட் வெல்வெட் கேக்கை எப்போது வேண்டுமானாலும் தயாரித்து வைத்து பரிமாறலாம்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 170 கிராம்
 • கலோரிகள் - 597 கலோரிகள்
 • கொழுப்பு - 25 கிராம்
 • புரோட்டீன் - 13 கிராம்
[ 5 of 5 - 97 Users]
Story first published: Wednesday, December 27, 2017, 16:00 [IST]