Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
Lakshmi Narayan Rajyog On May 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும் போது, மற்ற கிரகங்களுடன் சேர்தோ, நிலைகளின் மூலமோ அல்லது பார்வைகளாலோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் மே மாதத்தில் பல சுப மற்றும் ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் அசுரர்களின் தலைவனான சுக்கிரனும், கிரகங்களின் இளவரசனாக புதனும் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளன. முக்கியமாக இந்த ராஜயோகம் புதனின் சொந்த ராசியான மிதுன ராசியில் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். மேலும் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்வில் மகிழ்ச்சி பெருகும், பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். இப்போது மிதுன ராசியில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
லட்சுமி நாராயண ராஜயோகம் எப்போது உருவாகிறது?
பஞ்சாங்கத்தின் படி, அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் மே 29 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி மிதுன ராசியில் இவ்விரு கிரகங்களும் ஒன்றிணைவதால், மே 29 ஆம் தேதி மிகவும் சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்கார்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஆளுமை மேம்படும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களின் நிலை வலுவடையும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இருப்பினும், மன அழுத்தம், சரும பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும். எனவே ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வீர்கள். இந்த தேவையில்லாத செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். உறவுகளில் தவறான புரிதல்களால் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், இதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



