Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க
Hair Care Tips: முடி தொடர்பான பிரச்சினைகள் தற்போது பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் பாதிக்கிறது. முடி உதிர்தல் என்பது பலரையும் பாதிக்கும் ஒரு சங்கடமான நிலையாகும். முடி உதிர்வதால் இளைஞர்கள் குறிப்பாக ஆண்கள் இளம் வயதிலேயே வழுக்கைத் தலையைப் பெறுகிறார்கள். இது அவர்களின் தோற்றம் குறித்த தன்னம்பிக்கையை வெகுவாக பாதிக்கிறது.

முடியின் ஆரோக்கியம் மற்றும் வழுக்கை ஏற்படுவதில் மரபியல் முக்கியப் பங்கு வகித்தாலும், முடி ஆரோக்கியத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படும் மற்றொரு முக்கியக் காரணி, ஒருவரின் உணவுமுறையாகும். முடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியானது உடலில் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் இருப்பதைச் சார்ந்திருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் குறைவாக இருப்பது அல்லது அளவிற்கதிகமாக இருப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி முடி உதிர்தலுக்கும், வழுக்கைக்கும் வழிவகுக்கக்கூடும். முடி உதிர்தலுக்கும், வழுக்கை விழுவதற்கு காரணமாக இருக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக பாதரசம் கொண்ட மீன்களை உண்பது
உடலில் அதிகளவு பாதரசம் இருப்பது முடி உதிர்தலுடன் தொடர்புடையதாக உள்ளது. பாதரசத்தை உடலுக்குள் செலுத்தும் எளிதான உணவு மீன்தான். சில வகை மீன்களில் பாதரசத்தின் அளவு குறிப்பாக அதிகமாக இருப்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது. சுஷி, அயிலை, வாள்மீன் மற்றும் குறிப்பிட்ட சூரை மீன் போன்றவற்றில் பாதரசம் அதிகமாக உள்ளது. இறால், சால்மன் மற்றும் 'லைட் டியூனா' போன்ற மீன் வகைகளில் பாதரசத்தின் அளவு குறைவாக இருப்பதால், அவற்றை உட்கொள்வது நல்லது.
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பது
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை என்பது உடலில் பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமானது முடி மற்றும் நகங்களின் தரம் வலிமை மற்றும் தரம் குறைவது. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்துகிறது; இதன் விளைவாக, உடல் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மேலும் 'ஆண்ட்ரோஜன்கள்' எனப்படும் ஆண் பாலியல் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உரோமக்கால்கள் சுருங்கி, இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படும் நிலைக்கு வழிவகுக்கிறது.
புரோட்டின் பற்றாக்குறை
முடியை ஆரோக்கியமானதாக மாற்றும் அடிப்படை மூலப்பொருள் 'கெராட்டின்' எனப்படும் புரதமாகும். எனவே, போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால், முடி உதிர்தல் ஏற்படும் அபாயம் உங்களுக்கு அதிகரிக்கும். கொழுப்பற்ற இறைச்சி மற்றும் முட்டை புரதம் நிறைந்த சிறந்த உணவுகளாகும். சைவ உணவு உண்பவர்கள், புரதத்தைப் பெற பருப்பு வகைகள், கீரை, பீன்ஸ் மற்றும் டோஃபு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதிக கிளைசெமிக் உணவுகளை உட்கொள்வது
அதிக கிளைசெமிக் உணவுகள் எளிதில் சர்க்கரையாக மாறுகின்றன. எனவே, இந்த உணவுகள் முடியின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடலில் இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன்களை அதிகரிக்க வழிவகுக்கும், இது முடியின் ஆரோக்கியத்தைப் எதிர்மறையாகப் பாதிக்கும்.
அதிகளவு வைட்டமின் A உட்கொள்வது
கண்பார்வையை ஊக்குவிக்கவும், கூர்மையான பார்வைக்கும் வைட்டமின் A இன்றியமையாதது. இருப்பினும், வைட்டமின் A-வை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது முடியை பலவீனமாக்குவதுடன். முடி உதிர்வதற்கும் வழிவகுக்கும்.
கால்சியம் குறைபாடு
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்குக் கால்சியம் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். கால்சியம் குறைபாடு கூந்தல் மற்றும் நகங்கள் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பால், பாலாடைக்கட்டி மற்றும் பிற பால் சார்ந்த பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்வது முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு
இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் முடியின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களாகும், எனவே அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அவசியமான கெரட்டின் உருவாவதற்கு அவை அவசியமானதாகும். கடல் உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. மேலும், சைவ உணவு உண்பவர்களுக்கு பீன்ஸ் வகைகள் இந்த ஊட்டச்சத்துக்களின் ஒரு நல்ல மூலமாகும்.



Click it and Unblock the Notifications
