Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சீசன் இருக்கும் போதே பச்சை துவரை வாங்கி இப்படி கிரேவி செஞ்சு சாப்பிடுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...
Pachai Thuvarai Gravy Recipe In Tamil: குளிர்காலம் என்பதால் தற்போது பச்சை துவரை சீசன் தொடங்கியிருக்கும். இந்த சீசனில் மட்டும் தான் பச்சை துவரையின் சுவையை ருசிக்க முடியும். நீங்கள் இந்த பச்சை துவரையை இதுவரை சாப்பிட்டதில்லை என்றால், மார்கெட் சென்றால் நிச்சயம் இந்த துவரையை வாங்கலாம். இந்த துவரையைக் கொண்டு கிரேவி செய்தால் சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இது தவிர சாதத்துடனும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு பச்சை துவரை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை துவரை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கத்திரிக்காய் - 150 கிராம் (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை துவரை - 250 கிராம்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 10 பல் (நன்கு தட்டிக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சை துவரையை வாங்கி, அதில் உள்ள பருப்பை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை
சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுதது அதில் பொடியாக நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து,
அத்துடன் துவரையையும் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
ஒருமுறை கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் தட்டி வைத்துள்ள பூண்டு
பற்களை சேர்த்து அடுப்பில் வைத்து, மத்து கொண்டு உருளைக்கிழங்கை
மசித்து விட்டு, நீர் ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்து விட்டு,
குக்கரை இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பச்சை துவரை கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











