Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் -
ஏப்ரல் மாதத்தில் 5 முறை உருவாகும் அரிய சுப யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்! -
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் - புதிய ஆய்வு சொல்வது என்ன? -
IPL 2026: சிஎஸ்கே வீரர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய சென்னையின் பிரபல தெருவோர உணவுகள்! -
விஜய்க்கு எதிராக போட்டியிடப்போகும் 252 தேர்தல்களில் தோற்ற ' தேர்தல் மன்னன்' யார் தெரியுமா? -
மட்டன் பஞ்சு போல சாப்ட்டா இருக்கணுமா? அப்ப சமைக்கும் போது இந்த 2 பொருட்களை சேத்துக்கோங்க போதும்! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! -
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒருவாட்டி இந்த பொரிச்ச ரசத்தை செய்யுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Poricha Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் வைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான ரசம் தான் வைப்பீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமான சுவையில் ரசம் செய்யுங்கள். அதுவும் பொரிச்ச ரசத்தை ஒருமுறை செய்து பாருங்கள். இந்த ரசத்தை ஒருமுறை செய்தால், பின் வாரம் ஒருமுறையாவது இந்த ரசத்தை செய்வீர்கள். அந்த அளவில் இந்த ரசம் சுவையாக இருக்கும்.
உங்களுக்கு பொரிச்ச ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரிச்ச ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
* புளி தண்ணீர் - 1/2 கப்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* வெல்லம் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சாற்றினை சேர்த்து,
அத்துடன் ரசத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, அதில் நறுக்கிய
தக்காளியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சிறிது கறிவேப்பிலை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது வெல்லத்தை சேர்த்து
கலந்து மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் மல்லி, மிளகு,
சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், வெந்தயம்
ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வந்து நிறம் மாறும் வரை நன்கு வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* ரசம் நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி,
நுரைக்கட்ட ஆரம்பித்ததும், அதை இறக்கி கொத்தமல்லியைத் தூவ
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து கிளறினால்,
சுவையான பொரித்த ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











