Latest Updates
-
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இட்லி, தோசைக்கு ஒருவாட்டி பூசணிக்காய் வெச்சு இப்படியொரு சட்னி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Pumpkin Tomato Chutney Recipe: ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? எப்போதும் ஒரே சட்னிகளை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அதுவும் மஞ்சள் பூசணி இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் சட்னியை செய்யலாம்.
என்னது, மஞ்சள் பூசணியில் சட்னியா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், மஞ்சள் பூசணியைக் கொண்டு சட்னி செய்யும் போது, அந்த சட்னி இனிப்பு, புளிப்பு, காரம் என அனைத்தும் கலந்து, ஒரு புதுவிதமான சுவையுடன் இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கும் மிகவும் ஈஸியாக இருக்கும். குறிப்பாக இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பூசணிக்காய் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூசணிக்காய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* மஞ்சள் பூசணி - 2 கீற்று (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயம் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (நறுக்கியது)
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு....
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பூண்டு, புளி, சின்ன வெங்காயம் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள மஞ்சள் பூசணியை சேர்த்து
3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு காஷ்மீரி வரமிளகாய் மற்றும் வரமிளகாயை சேர்த்து,
கொத்தமல்லியைத் தூவி 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து 1 முறை கிளறி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
வேர்க்கடலையையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
பூசணிக்காய் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: I camp in my kitchen



Click it and Unblock the Notifications











